For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக மீது தாக்கு: ஜெ.வின் அதிரடி பல்டிப் பாய்ச்சலின் பின்னணியில் தவ்ஹீத் ஜமாத்?

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பாரதிய ஜனதாவை மிகக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று திடீரென ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அதிமுக நெருக்கம் காட்டியது. ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளை அதிமுக ஆதரித்தது.

அதன் பின்னர் பாஜக தனியே ஒரு கூட்டணி அமைக்க பெரும் போராட்டம் நடத்தியது. இடதுசாரிகளோ அதிமுக அணியில் இடம்பெற்றனர். ஆனால் திடீரென இடதுசாரிகளை விரட்டியடித்தது அதிமுக. பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது.

பாஜகவுடன் கூட்டணி?

பாஜகவுடன் கூட்டணி?

இடதுசாரிகளை அதிமுக விரட்டிவிட்டதே, தேர்தலுக்குப் பின்னர் பாஜக அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்று கூறப்பட்டது.

பாஜகவை தாக்காத ஜெ.

பாஜகவை தாக்காத ஜெ.

இதை உறுதிப்படுத்தும் வகையில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஒருமுறை கூட பாரதிய ஜனதாவை ஜெயலலிதா விமர்சிக்கவே இல்லை.

பாஜகவின் பி டீம் அதிமுக

பாஜகவின் பி டீம் அதிமுக

இதை சுட்டிக்காட்டி திமுக, இடதுசாரிகள் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூட இதை சுட்டிக்காட்டி பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்று விமர்சித்தார்.

தவ்ஹீத் ஜமாத்

தவ்ஹீத் ஜமாத்

இதில் உச்சகட்டமாக அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திடீரென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேற்று அறிவித்தது. தவ்ஹீத் ஜமாத்தும் பாஜகவை அதிமுக விமர்சிக்காததால் இம்முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.

வேறு வழியில்லாமல் பாய்ச்சல்

வேறு வழியில்லாமல் பாய்ச்சல்

இதனால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் வாக்கு திமுகவுக்குப் போகும் நிலையை உணர்ந்ததாலேயே வாக்கு சேதாரத்தை தடுக்க வேறுவழியில்லாமல் இப்படி பல்டி அடித்து பாரதிய ஜனதா மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அதிரடி காட்டியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Jayalalithaa’s u turn that her poll campaign now focus on BJP also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X