மே டூ டிசம்பர்... பாஜகவின் நெருக்கடியால் ஆறப்போட்டு முடிவை சொல்கிறாரா ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை : கடந்த மே மாதமே ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியை பாஜகவுடன் சேருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது பாஜக. இதனால் விஷயத்தை ஆரப்போட்ட ரஜினி டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

  கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களின் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறியது 2017ல் தான். அப்போது தான் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு பொறியை தட்டி விட்டார் ரஜினிகாந்த். போருக்குத் தயாராக இருங்கள் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார்.

  இதனால் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பார் என்று ரசிகர்கள், மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ரஜினியின் அரசியல் பேச்சுகள் பரபரப்பாக பேசப்பட்டதால் பாஜக ரஜினியை தன் வசம் இழுக்க முயற்சிகள் செய்தது.

  பாஜக திட்டம்

  பாஜக திட்டம்

  பாஜகவிற்கு தொடர்ந்து தமிழகத்தில் நல்லபெயர் இல்லை. பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு பிரபலமான மக்கள் செல்வாக்கு உள்ள நபர் தேவை என்று பாஜக கருதியது. ரஜினியின் நிதானம், ஆன்மீக சிந்தனைகள் அனைத்தும் பாஜகவிற்கு பொருந்துவதால் ரஜினியை தங்கள் வசம் இழுக்க பாஜக திட்டம் போட்டது.

  அமித்ஷா நேரடி அழைப்பு

  அமித்ஷா நேரடி அழைப்பு

  இதனால் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்றார். பிரதமர் மோடியும், ரஜினியும் நண்பர்கள் எனவே அவர் பாஜகவுடன் சேர்வது உறுதி என்ற ரீதியில் ரஜினிக்கு மறைமுகமாக அப்போது அழுத்தங்களும் தரப்பட்டன.

  கமலின் மாற்று அரசியல்

  கமலின் மாற்று அரசியல்

  மற்றொரு புறம் நடிகர் கமல்ஹாசன் பாஜகவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குவது போன்ற நிலைப்பாடும் நிலவுகிறது. அரசியலுக்கு வந்துவிட்டதாக சொன்ன கமல் பாஜகவுடன் எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கும் உம்மன்சாண்டி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்தார்.

  ஆறப்போட்ட ரஜினி

  ஆறப்போட்ட ரஜினி

  இதனால் தனது அரசியல் அறிவிப்பை தள்ளிப் போட்ட ரஜினி. ஒரு வழியாக டிசம்பர் 31ல் அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லி இருக்கிறார். பாஜகவின் நெருக்குதல் காரணமாகவே தன்னுடைய அரசியல் அறிவிப்பை ரஜினி தள்ளிப்போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை அவர் வெளியிடப் போகும் அறிவிப்பில் தான் அவருடைய அரசியல் வியூகம் எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்போகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Why Rajini's Political entry delayed from May to December is it because of BJP's pressure for him?. Finally Rajini relaxed from the pressure and take his call to declare his decision on 31st December.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X