For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் இலவச சாம்பார்... அறிவிப்பு வெளியாகுமோ?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பருப்பு விலை ஏற்றம் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்பார் ஏன் தண்ணியா இருக்கு? என்று இல்லத்தரிசிகளிடம் கேட்டுவிட்டு பருப்பை தேடிக்கொண்டிருக்கின்றனர் கணவர்கள்.

இப்படி வச்சா இதுக்கு பேரு சாம்பாரு இல்லை... ரசம் என்று வக்கனை பேசும் கணவருக்கு, குட்டு வைக்கும் இல்லத்தரசிகள்... இப்படியே பேசுனா இது கூட கிடைக்காது வெறும் புளித்தண்ணியத்தான் ஊத்துவோம் என்று கதிகலங்க வைக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

ஒரு கிலோ 110 ருபாய்க்கு பருப்பு போடறாங்கலாம்ல... அதுக்கும் ரிசர்வேசனாம்ல என்று பேசுகின்றனர். நேற்றைய போஸ்டர் செய்தியே பருப்பு ரிசர்வேசன் செய்திதான். இதைப்படித்த திருவாளர் பொது ஜனங்களோ... ரயிலுக்கு ரிசர்வேசன்... பஸ்சுக்கு ரிசர்வேசன்... ஏன் திருப்பதி வெங்கடாசலபதியை பார்க்க கூட ரிசர்வேசனில் போய் இப்போது பருப்புக்கு ரிசர்வேசனில் கொண்டு வந்துட்டாங்களே என்று கவலைப்படத் தொடங்கிவிட்டனர். எதற்கும் கவலைப்படாத வலைத்தளவாசிகளும் துவரம் பருப்பு விலை உயர்வுக்கு மாய்ந்து மாய்ந்து மீம்ஸ் போடுவதோடு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடைசி கையெழுத்து

கடைசி கையெழுத்து

முதல்நாள் முதல் கையெழுத்து மோகம் பிடித்து ஆட்டி வரும் நிலையில் அதிமுக ஆட்சியின் 'கடைசி நாள் கடைசி கையெழுத்து இலவச சாம்பார்' என்று போஸ்டர் ரெடி செய்து வாட்ஸ் அப்பில் உலாவ விட்டுள்ளனர் சில குசும்பர்கள்.

புதுமொழி

1கிலோ வெங்காயம் வாங்கிப்பார் 1கிலோ துவரம் பருப்பு வாங்கிப்பார் என்பது வலைஞர்களின் புதுமொழி.

சங்கர் படம் பிரம்மாண்டம்

சங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான்... தன்னுடைய அடுத்த படத்தின் சண்டைக்காட்சியை பருப்பு குடோனில் வைத்திருப்பதாக சொல்லி கிலியை ஏற்படுத்துகின்றனர்.

சாம்பார் சட்டிக்கு பூட்டு

சாம்பார் சட்டியை யாரும் திறந்து திருடிவிடக்கூடாது என்று எவ்ளோ பெரிய பூட்டு போட்டிருக்கிறார்கள் பாருங்கள்.

மக்களின் விதி எண் 110

விதி எண்ணும் 110 இனி துவரம் பருப்பு விலையும் 110 என்று வருத்தப்படுகிறார் ஒரு வலைஞர். எப்படியோ பருப்பை வச்சு டுவிட்டர்வாசிகளுக்கு பொழுது ஓடுதுப்பா.

English summary
As it is becoming costly having sambar housewives are asking the ADML that will their govt give free sambar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X