காவிரியில் அரசியல் செய்யவில்லை.. தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் தயார்.. ஆளுநர் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேராசிரியை ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு

  சென்னை: காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை, தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தயாராகி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார்.

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிண்டி ஆளுநர் மாளிகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி வருகிறார். தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடங்கி காவிரி பிரச்சனை வரை அனைத்து பற்றியும் அவர் இதில் பேசினார்.

  Will do every best scheme for farmers says TN governor

  இதில் காவிரி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ''ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன். காவிரி விவகாரம் பற்றி நிதின் கட்ரியிடம் எடுத்துரைத்தேன். இதில் விரைவில் நல்ல செய்தி வெளியாக வாய்ப்பு இருக்கிறது'' என்றுள்ளார்.

  மேலும் ''காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. கட்கரியிடம் பேசிய பிறகு அவர் மிகவும் தீவிரமாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். விவசாயிகள், தமிழக நலனுக்கான திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும்'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Will do every best scheme for farmers says TN governor Banwarilal Purohit in press meet. He says that he has talked about Cauvery issue with the central government.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற