ராஜீவ் கொலை குற்றவாளிகளை சட்டத்திற்கு புறம்பாக விடுதலை செய்ய முடியாது: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்

  சென்னை: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

  தற்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பேரறிவாளனின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு வாதாடி வருகிறது.

  Will think about the release of Rajiv murderers if law allows says TN CM Edappadi Palanisami

  இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

  அதற்கு ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை சட்டப்படி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய முடியாது, சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Will think about the release of Rajiv murderers if law allows says TN CM Edappadi Palanisami.Previously Rahul Gandhi said that, he forgave Rajiv Gandhi murderers.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற