For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று உலக சர்க்கரை நோய் தினம்: இந்தியாவில் 70% பேர் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

நெல்லை: சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது.

இந்தியா, 2025ம் ஆண்டு, உலகத்தில் உள்ள மாற்ற நாடுகளை விட அதிகமான சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக இருக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும், 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும், பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது.

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 70 சதவீதம் பேர் சர்க்கரை நோயினால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவர் சங்கரன் கூறியதாவது, மரபணு ரீதியாக இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இன்றைய நிலையில் இந்தியாவில் 70 சதவீதம் பேர் தெரிந்தோ தெரியாமலோ சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம் மற்றும் வருமானத்தின் பெரும்பகுதி சர்க்கரை நோய் சிகிச்சைக்கு செலவிட வேண்டியதாக இருக்கும்.

இன்சுலின் குறைபாடு

இன்சுலின் குறைபாடு

பொதுவாக சர்க்கரை நோய் தாக்கிய 6 வருடங்களுக்கு பின்னரே அதன் பாதிப்பு முழுமையாக தெரிய வரும். அதாவது கணையத்தில் பீட்டா செல்லின் செயல்பாடு குறைந்து இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால் சிலருக்கு தாமதமாக சர்க்கரை நோய் இருப்பது தெரிய வரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

நடைபயிற்சி அவசியம்

நடைபயிற்சி அவசியம்

நடை பயிற்சி செலவில்லாத சிறந்த மருத்துவம் ஆகும். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப்பில்லை. முதல் 10 நிமிடம் நிதானமாகவும், அடுத்த 10 நிமிடம் வேகமாகமவும் கடைசி 10 நிமிடம் மீண்டும் நிதானமாகவும் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர்.

பார்வை இழப்பு

பார்வை இழப்பு

சர்க்கரை நோய், கண் பார்வையை இழக்க செய்யும் கொடிய நோயாகும். வரும் 2025ம் ஆண்டுக்குள், இந்தியாவில், ஒரு கோடியே, 50 லட்சம் சர்க்கரை நோயாளிகள், கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில், 50 முதல், 70 லட்சம் பேர் மிகவும் அதிகமான பாதிப்புக்கு ஆளாகி, பார்வை முற்றிலும் இழக்கும் அபாயம் உள்ளது.

கண் பரிசோதனை அவசியம்

கண் பரிசோதனை அவசியம்

சர்க்கரை நோய் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் கண்பார்வை இழப்பை ஏற்படுத்த கூடியது. மேலும் விழித்திரையின் மையப்பகுதியான மாகுலா பாதிப்புக்குள்ளானால், சிகிச்சைகள் மேற்கொண்டாலும், முழுப்பார்வை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதனால், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இருப்பது கண்டறிந்து உடனே கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும், கண்களை முறையே பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனைப்படி உரியே நேரத்தில் லேசர் சிகிச்சை, நவீன ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் மட்டுமே பார்வை இழப்பை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
Today celebrates World Diabetes Day, a day of global awareness of the disease held annually. The theme for 2014 is Healthy Living and Diabetes – specifically focusing on how blood sugar levels can be controlled by eating a good breakfast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X