For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக தூக்க தினம் 2018: நல்லா தூங்கினா உறவில் உச்சத்தை எட்டலாம்! #worldsleepday2018

நல்ல தூக்கம் இருந்தால் தான் நிறைவான தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: குறைவான தூக்கம் அல்லது தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்களால் தாம்பத்ய உறவில் உச்சத்தை எட்ட முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தூக்கம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு, இதய நோய் எடையில் ஏற்றத்தாழ்வு, சில நேரங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

விலை உயர்ந்த மெத்தை வாங்கியும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கர்மவினைதான். தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சினில் நிலைக்கட்டுமே என்று பாடலே உள்ளது. தூக்கத்திற்கும் மன அமைதிக்கும் நிறைய தொடர்பு உள்ளது.

தூக்கம் குறைந்தால் உடம்பும், மனதும் நோய்களின் கூடாரமாகிவிடும். தூக்கத்திற்கும் நோய் தாக்குவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தானே கேட்கிறீர்கள் மேற்கொண்டு படியுங்கள்.

தூக்கத்திற்கு உறவுக்கும் தொடர்பு

தூக்கத்திற்கு உறவுக்கும் தொடர்பு

5 மணி நேரம் தூங்கும் பெண்களை விட அதற்கு அதிகமான நேரம் தூங்கும் பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி அடைகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வயதானவர்களுக்கு தூக்க பிரச்னை இருக்கும் என்றாலும், தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு, திருப்தி தூங்கும் நேரத்தை பொறுத்து மாறுபடுகிறது.

உறவில் திருப்தி இருக்காது

உறவில் திருப்தி இருக்காது

அமெரிக்காவின் மெனோபாஸ் சொஸைட்டி நடத்திய ஆய்வில், பெரும்பாலான பெண்கள் நன்றாக தூங்கினால் தான் மகிழ்வுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளனர். குறைவான தூக்கம் அல்லது தூக்கமின்மையினால் அவதிப்படுகிறீர்கள் என்றால் தாம்பத்ய உறவில் உச்சத்தை எட்ட முடியாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களுக்கு பாதிப்பு

ஆண்களுக்கு பாதிப்பு

தூக்கமின்மை காரணமாக ஆண்களுக்கு டெஸ்ட்ரோன் அளவு குறைந்திடும். ஒரு நாளில் ஐந்து மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேர தூங்குபவர்களுக்கு உறவை தூண்டும் ஹார்மோன் பத்து சதவீதம் குறைகிறது.

கண்களை தழுவும் உறக்கம்

கண்களை தழுவும் உறக்கம்

உடல் சோர்வடையும்போது தூக்கம் தானாகவே கண்களை தழுவும். சிலர் தூக்கத்திற்காக மாத்திரை, மருந்துகளையெல்லாம் நாடுவார்கள். அவற்றையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொண்டாலே தூக்கம் கண்களை தானாக தழுவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும்

தூக்க குறைபாடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நோய்களின் கூடாரமாக மாற்றிவிடுகிறது. இரவில்
நன்றாக தூங்கி எழுவதன் மூலம் உங்களது உடல் மற்றும் மனது ஆகிய இரண்டுமே புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாள் பணியை சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

பக்கவாதம்

பக்கவாதம்

இரவில் உறங்காமல் ராக்கோழியாக முழித்திருப்பவர்களுக்கு இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை தாக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். தூக்கமின்மையால் ஞாபகமறதியும் ஏற்படும் என்கின்றனர். இரவு நேரத்தில் தூங்காமல், அல்லது குறைந்த நேரம் தூங்கினால் கூர்ந்து கவனிக்கும் திறன் குறையும். மூளை தனக்கு தேவையான ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் போது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும்.
என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
Researchers say lack of sleep can kill sex drive in both men and women sleep-deprived men and women were found to have lower libidos and less interest in sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X