For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழுத்தை நெரிக்கும் கஷ்டங்களா.. அதற்கு தற்கொலை தீர்வல்ல..!

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்க துணிவில்லையா? கஷ்டங்கள் உங்கள் கழுத்தை நெரிக்கின்றதா?

அதற்கு தற்கொலை தீர்வல்ல.. அதை விட அருமையான பல தீர்வுகள் காத்திருக்கின்றன. உங்களுக்குக் கூட தெரியாமல்.

இதைக் கண்டுபிடிக்கக் கூட யாரும் முன்வருவதில்லை. நொடி நேர முடிவால் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் அந்த வழியைக் கண்டுபிடித்தால் நீங்கள் வாழ்க்கையில் வெல்லலாம்.

World suicide prevention day…

முட்டாள்களின் முடிவு:

தற்கொலை... ஆத்மஹத்தி, ஹராம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு கொடிய சுய சிந்தனை. கொஞ்சம் கூட நம்மைச் சார்ந்தவர்களை நினைத்துப் பார்க்காமல் எடுக்கப்படும் முட்டாள்தனமான முடிவு.

பிரச்சனைகளின் களம்:

பிரச்சனைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை... அமெரிக்க அதிபரானாலும் சரி, இந்தியப் பிரதமரானாலும் சரி, தமிழக முதல்வர் ஆனாலும் சரி பிரச்சனைகள் இல்லாமல் வாழ்பவர்கள் என்று யாரும் கிடையாது.

வாழ்க்கைக்கு தகுதியில்லை:

ஆனால், அவற்றைச் சந்திக்கவும், எதிர்கொள்ளவும் பயந்து தற்கொலைதான் நிரந்தரத்தீர்வு என்று முடிவெடுப்பவர்கள் கண்டிப்பாக இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்கே தகுதியற்றவர்களாக மாறி விடுகிறார்கள்.

தற்கொலை பேஷன்:

தேர்வில் தோல்வியா தற்கொலை...மண வாழ்க்கையில் பிரச்சனையா தற்கொலை...காதல் தோல்வியா தற்கொலை...இதெல்லாம் போய் கணவர் ஐஸ்கீரிம் வாங்கித்தர மறுத்ததற்கெல்லாம் தற்கொலை என்று தற்கொலை ஒரு பேஷனாய் போய்விட்டது.

கழுவும் மீனில் நழுவுபவர்கள்:

இதில், தற்கொலை செய்து கொள்ள தனி தைரியம் வேண்டும் என்று சால்ஜாப்பு வேறு. அதென்ன பைக் ரேஸா, குத்துச்சண்டை போட்டியா இல்லை நான்கு பேரோடு போடும் சண்டையா தைரியம் வரவழைத்துக் கொள்வதற்கு. உயிரையே வேரோடு பிடுங்கிப் போடும் விஷயம் அது. அதற்குத் தைரியம் தேவையில்லை. கோழைத்தனம்தான் முக்கியம் தேவை. தைரியம் இருந்தால்தான் வாழ்ந்து விடலாமே.

குடும்பம் தேவையில்லை:

தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் நம்முடைய உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, குழந்தைகள், உறவினர்கள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைக்க வேண்டுமே இப்போது சொல்லுங்கள் யார் உண்மையான தைரியசாலி?

அதிகரிக்கும் தற்கொலைகள்:

உலகம் பூராவும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துவருகிறார்கள். அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சி:

உலக ஜனத்தொகையில் யுத்தங்கள் மூலம் இறந்தவர்களை விட சுயமாக தற்கொலை செய்தவர்களே அதிகம் என ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கின்றதாம்.

உலக சாதனையல்ல:

பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடும் நமக்கு, இந்த கணநேர உணர்ச்சியைக் கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும். தூக்கு மாட்டிக் கொள்வதோ, விஷம் குடிப்பதோ, தீக்குளிப்பதோ ஒன்றும் உலக சாதனையல்ல.

தீராத அவப்பெயர்:

இதனால் உங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் ஒன்றும் இடம் பெறப் போவதில்லை. காலம் முழுவதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.

தூக்குப் போட்டு தற்கொலை:

தூக்கு மாட்டிக் கொண்டால் எளிதாக ஒன்றும் உயிர் போய்விடாது. முதலில் கழுத்து நரம்புகள் உடைந்து, மூச்சுத் திணறி, கண்கள் நிலைகுத்தி, மிகவும் கொடூரமான முறையில்தான் உயிர் போகும்.

விஷம் குடித்தால்:

விஷம் குடித்தாலோ, தொண்டையில் இருந்து நெஞ்சு வரை தாங்க முடியாத எரிச்சம் உண்டாகி, உங்களுடைய உணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறுந்து, சமயத்தில் வலிப்பு கூட ஏற்பட்டு உயிர் போகுமாம்.

கத்தி எடுத்தால்:

கத்தி எடுத்து அறுத்துக் கொண்டால், கையில் உள்ள நரம்புகள் அறுபட்டு இதயமும், மூளையும் செயல் இழந்து மிக கொடுமையான சாவாக இருக்கும். உங்கள் ரத்தம் ஆறாக வெளியேறுவதை நீங்களே பார்ப்பீர்கள்.

ஆண்டவா கொடுமை:

சரி, மலையில் இருந்தோ, மாடியில் இருந்து குதித்தோ தற்கொலை செய்து கொண்டால் மூளை முதல் தலை வரை சிதறிச் சாவீர்களாம். தீக்குளித்தால் நீங்கள் அவ்வளவுதான். வெறும் கரிக்கட்டைதான்.

பிறக்கவே தேவையில்லை:

இதையெல்லாம் விட இக்காட்சியைக் கண்டு, உங்களை புதைப்பதோ, எரிப்பதோ செய்யும் வரையில் குடும்பத்தினர் படும் பாடு இருக்கின்றதே அதற்கு நீங்கள் பிறக்கும் போதே இறந்தே பிறந்திருக்கலாம் என்று தோன்றும்.

தற்கொலைத் தடுப்பு தினம்:

செப்டம்பர் 10ம் தேதி அதாவது நாளை, "உலக தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலக சுகாதார‌ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது.

துன்பம் வரும் வேளையில் சிரிங்க:

இப்போது சொல்லுங்கள் வாழ்க்கையில் என்ன துன்பம் வந்தாலும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கப் போகின்றீர்களா? இல்லை, எல்லாரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீங்கள் மட்டும் தற்கொலை அரக்கனிடம் மாட்டிக் கொள்ளப் போகீன்றீர்களா?

English summary
World suicide prevention day held September 10th every year. People don’t take the decision to suicide for problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X