For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எஸ்.விக்கு பத்ம விருது கொடுக்காத இந்தியா ஒரு நாடா?: ஒய்.ஜி மகேந்திரன் ஆவேசம்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: நான் இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன். இன்றைக்கு வெட்கப்படுகிறேன். எம்.எஸ்.வி மாதிரியான ஒரு மாமேதைக்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காதா இந்தியா ஒரு நாடா.. இப்படி ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இவருக்கு கொடுக்காத அந்த விருதுக்கு இனிமேல் மதிப்பே கிடையாது என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்.

மறைந்த எம்.எஸ்.வி.க்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மெல்லிசை மன்னருக்கு இறப்பில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது, சாக வேண்டும் என்று நினைக்கிறது அவருடைய இசையைக் கேட்டுக் கொண்டு தான். எனக்கு தெரிந்த ஒரே கம்போஸர் எம்.எஸ்.வி மட்டும் தான்.

மெலடி பாடல்கள்

மெலடி பாடல்கள்

சின்ன வயதில் இருந்தே அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். அவருடைய காதல் பாட்டுக்களைக் கேட்டு வளர்ந்தவன். இனிமேல் மெலடி பாடல்களைப் போடுவதற்கு ஆளே கிடையாது.

நான் வெட்கப்படுகிறேன்

நான் வெட்கப்படுகிறேன்

நான் இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன். இன்றைக்கு வெட்கப்படுகிறேன். இந்த மாதிரியான ஒரு மாமேதைக்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காதா இந்தியா ஒரு நாடா.. இப்படி ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இவருக்கு கொடுக்காத அந்த விருதுக்கு இனிமேல் மதிப்பே கிடையாது.

இசைக்கு மறைவில்லை

இசைக்கு மறைவில்லை

இன்னிசை என்றால் என்ன என்று எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தவர் எம்.எஸ்.வி தான். இவர் போட்டுக் கொடுத்த பாதையில் மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய உடல் நம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய இசைக்கு என்றைக்குமே மறைவில்லை.

எம்.எஸ்.வி பாடல்கள்

எம்.எஸ்.வி பாடல்கள்

என்னுடைய இறுதி மூச்சு வரும் போது, சமஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாம் வேண்டியதில்லை. என்னுடைய உடலுக்கு அருகில் எம்.எஸ்.வி பாடல்கள் போடவும். இதை நான் என் உயிலில் எழுதி வைத்திருக்கிறேன்." என்று கண்ணீர் மல்க கூறினார்.

வைரமுத்து அஞ்சலி

வைரமுத்து அஞ்சலி

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, பல்லாண்டுகளாக இசைத்துக்கொண்டிருந்த ஹார்மோனியம் அடங்கி விட்டது. இசையுலகம் இன்றளவிற்கு வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, எம்.எஸ்.வி.யின் பங்கு அளப்பரியது. மேற்கத்திய இசையை, கர்நாடக இசையுடன் கலந்து, இசையுலகிலேயே மாபெரும் புரட்சியே ஏற்படுத்தியவர் எம்.எஸ்.வி.என்று கூறினார்.

English summary
Actor Y G Mahendran has slammed the govts for not honouring M S Viswanathan for his contribution to the music and Indian cinema.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X