சென்னையில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இந்துஜா... எரித்துக் கொன்ற ஆகாஷ் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தொடரும் ஒருதலை காதல் கொலைகள்...வீடியோ

  சென்னை: ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  உயிரிழந்த பெண்ணின் பெயர் இந்துஜா என்பதாகும். இவர் ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரை ஆகாஷ் என்பவர் காதலித்து வந்தார்.

  இவரது காதலை இந்துஜா ஏற்க மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று விட்டு தப்பினார் ஆகாஷ். தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  பட்டதாரி பெண் இந்துஜா

  பட்டதாரி பெண் இந்துஜா

  ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இந்துஜாவும், ஆகாஷ் என்பவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இந்துஜாவை ஆகாஷ் காதலிப்பதாக கூறியுள்ளார்.

  இந்துஜா மறுப்பு

  இந்துஜா மறுப்பு

  ஆகாஷ் காதலை ஏற்க இந்துஜா மறுத்து விட்டார். விரக்தியில் இருந்த ஆகாஷ் நேற்றிரவு இந்துஜா வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது இந்துஜாவின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதாவும் வாக்குவாதம் செய்தனர்.

  தீ வைத்த ஆகாஷ்

  தீ வைத்த ஆகாஷ்

  கையில் பெட்ரோல் கேனுடன் வந்த ஆகாஷ், நின்று கொண்டிருந்த இந்துஜா, அவரது தயார், சகோதரி மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். மூவருமே எரிந்தனர். இதில் இந்துஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

  ஆகாஷ் கைது

  ஆகாஷ் கைது

  இந்துஜாவின் தாயார், சகோதரி ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான ஆகாஷ் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒருதலைக்காதல் விரக்தியால் காதலிக்கும் பெண்ணின் வீட்டை பெட்ரோல் ஊற்றி காதலன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A girl killed in Chennai in the case of one side lover. Police recovered her body and filed case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற