காதலுக்காக பெற்ற தாய் தந்தையருக்கு உணவில் மயக்க மருந்து... மிலிட்டரிகாரருடன் கம்பி நீட்டிய இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோருக்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு காதலனுடன் இளம்பெண் தப்பித்து ஓடினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த முக்குறும்பை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களது மகள் திவ்யா. பி.ஏ மாணவியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் விஜயராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

Young girl seduces their parents and escaped with Lover

விஜயராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது காதல்ஜோடியினர் சந்தித்து பேசினர்.

சம்பவத்தன்று இரவு சமைத்த உணவில் மயக்க மருந்தைக் கலந்து திவ்யா, தனது பெற்றோர் மற்றும் சகோதரிக்குப் பரிமாறியுள்ளார். இதனால், மூவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, விஜயராஜும், திவ்யாவும் ஊரை விட்டு ஓடினர்.

பிறகு, மயக்கம் தெளிந்த பிச்சாண்டி மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்,மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர். அப்போது, வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் திவ்யா மாயமானது தெரியவந்ததை அடுத்து போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட விசாரணையில், திவ்யா மற்றும் விஜயராஜ் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது தான் விருப்பப்பட்டே விஜயராஜை திருமணம் செய்துகொண்டதாகவும், பணம் நகை எதையும் எடுத்துச்செல்லவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக திவ்யா வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Young girl seduces their parents and escaped with Lover. Thiruvannamalai Girl uses seductive drug to seduce their parents and Eloped with Lover.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற