"அதுக்கு" போட்டி.. இளம்பெண் கொலை.. 8 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இளம்பெண் நிர்வாணமான நிலையில் கொலையுண்டு கிடந்தார். இது தொடர்பாக 8 வாலிபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஆதித்தன் (35). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி ஷாலினி (27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆதித்தனும், ஷாலினியும் பிரிந்து விட்டனர். ஆதித்தன் தோவாளையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்தார். எனினும் அவ்வபோது ஷாலினியை சந்தித்து அவருக்கு தேவையான பொருள் உதவியை ஆதித்தன் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்பக்கம் கதவு வழியாக...

பின்பக்கம் கதவு வழியாக...

இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி காலை ஷாலினியை பார்ப்பதற்காக ஆதித்தன் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முன் பக்க கதவு பூட்டிக்கிடந்தது. அதேசமயம் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. பின்பக்கம் வழியாக ஆதித்தன் வீட்டுக்குள் சென்றார்.

ரத்த வெள்ளத்தில் ஷாலினி

ரத்த வெள்ளத்தில் ஷாலினி

அப்போது படுக்கை அறையில் நிர்வாணமான நிலையில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதித்தன், ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

செக்ஸ் விவகாரமா

செக்ஸ் விவகாரமா

ஷாலினி நிர்வாணமான நிலையில் கொல்லப்பட்டிருந்ததால் அவருடன் நெருக்கமாக இருந்திருக்க யாரேனும் முயற்சி செய்திருக்கக் கூடும். அப்போது நடந்த போட்டியில் ஷாலினி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்களுடன் தொடர்பு

பல ஆண்களுடன் தொடர்பு

ஷாலினி சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். அதன்பின்னர் அருகில் உள்ள செங்கல் சூளையிலும் வேலைக்கு செய்துள்ளார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இரவு பகல் பாராமல்

இரவு பகல் பாராமல்

இதைத் தொடர்ந்து ஷாலினியின் வீட்டிற்கு நிறைய வாலிபர்கள் இரவு, பகல் என பாராமல் அடிக்கடி வந்து செல்வர் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். மேலும் ஷாலினியின் உடல் அருகே இருந்த செல்போனை ஆராய்ந்ததில் அவர் பல ஆண்களுடன் மணிக்கணக்கில் பேசியதும் தெரியவந்தது.

8 பேரிடம் விசாரணை

8 பேரிடம் விசாரணை

கடந்த 15-ஆம் தேதி இரவு 2 வாலிபர்கள் ஷாலினி வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் ஷாலினி கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஷாலினியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் ஷாலினியுடன் அடிக்கடி பேசி வந்த 8 வாலிபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Young lady who was separated from her husband was murdered in Nagercoil. The Police probe starts and inquires 8 men who were often made telephonic conversation with Shalini the young lady.
Please Wait while comments are loading...