For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: த.மா.கா. போராட்டம் அறிவிப்பு

விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமாக போராட்டம் அறிவித்துள்ளது.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடியோ

    ஈரோடு: விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

    த.மா.கா இளைஞரணியின் ஈரோடு மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞரணி மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை அமைக்கும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Youth Congress Leader Yuva Raja Announced Protest In Erode

    நீட் தேர்வில் தமிழக அரசின் கவனகுறைவால் 50 சதவீத மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அடுத்த ஆண்டிலாவது அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். மணல் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதைப்போல அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் விவசாய விளை நிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து 11 மாவட்டத்தில் இளைஞரணி சார்பில் அடுத்த வாரம் முதல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு யுவராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    English summary
    Youth Congress leader Yuvarajah has announced that there will be a protest in 11 districts to protest against the construction of electricity towers through agricultural lands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X