For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடத்தில் வானதி சீனிவாசனிடம் அநாகரீகம்.. வாலிபரை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: பொது இடத்தில் வைத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரை பாஜக தொண்டர்கள் அடித்துவிரட்டினர்.

இந்த சம்பவத்தால் கோவை, கோனியம்மன் கோயில் அருகே இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 66வது பிறந்தநாள். இதையொட்டி கோவை புளியங்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அடிக்கல் நாட்டினார்.

கோயிலில் வழிபாடு

கோயிலில் வழிபாடு

இதையடுத்து கோனியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். நரேந்திர மோடியின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக கோயிலில் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பூங்கொத்தை கொடுத்தார்

பூங்கொத்தை கொடுத்தார்

வழிபாடு நடத்திவிட்டு கோயிலில் இருந்து வெளியே வந்தபோது அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. திடீரென ஓடிவந்த ஒரு நபர் பூங்கொத்தை கொடத்து, காதலிப்பதாக கூறினார். இதனால் வானதி சீனிவாசன் கடும் கோபம் கொண்டார். முதலில் யாரோ தொண்டர், பூங்கொத்து கொடுப்பதாக நினைத்த தொண்டர்கள், பிறகுதான் நடப்பதை கவனித்தனர்.

போலீசில் ஒப்படைப்பு

போலீசில் ஒப்படைப்பு

பூங்கொத்து கொடுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நபரை நைய புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் மதுரையைச் சேர்ந்த முத்துவேல் என்று தெரிய வந்தது.

பெண்கள் பாதுகாப்பை பாருங்கள்

பெண்கள் பாதுகாப்பை பாருங்கள்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வானதி, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பங்கு அனைவருக்கும் உண்டு எனவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முதலில் வரவேண்டும் எனவும் கூறினார்.

அநாகரீகத்தின் உச்சம்

அநாகரீகத்தின் உச்சம்

வானதி சீனிவாசனுக்கு மணமாகி, 2 மகன்கள் உள்ளனர். பிளஸ்டூ மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் வயதில் மகன்கள் உள்ள திருமணமான ஒரு பெண்ணிடம் இவ்வாறு முத்துவேல் நடந்து கொண்டது அறுவெறுப்பை ஏற்படுத்தியது. மேலும், வானதி சீனிவாசனை அரசியலில் இருந்து துரத்திவிட இதுபோன்ற காரியங்களில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ முத்துவேல் நடந்திருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சதியாக இருக்கலாம்

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசனுக்கு ஆதரவு அதிகரித்தது. அந்த நேரத்தில், ஜெயின் கோயிலில் ஆதரவு கேட்க வந்த அவரை வழிமறித்து சில ஆண்கள் ஆபாசமாக பேசினர். அவர்கள் அதிமுகவினர் என வானதி குற்றம்சாட்டியிருந்தார். தேர்தலில் தோற்றபோதும், டெபாசிட்டை வாங்கிய பாஜக வேட்பாளர் இவர். வாங்கிய வாக்குகள் 33,113 என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Youth propose his love to BJP state secretary Vanathi Srinivasan in Coimbatore, who thrashed by the party men and handover him to the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X