தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தகதகவென மின்னும் தஞ்சைப் பெரிய கோவில்! படையெடுக்கும் மக்கள்! எல்லாம் பொன்னியின் செல்வன் எஃபெக்ட்!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தஞ்சை நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது. பொன்னியின் செல்வன் தாக்கத்தால் வழக்கத்தை விட மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

அவர் பிறந்த தினம் ஆண்டு தோறும் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்படவுள்ளது. அதன்படி இரண்டு நாட்கள் நடைபெறும் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.

பொன்னியின் செல்வன்..ராஜ ராஜசோழன் 1037 வது சதய விழா.. தஞ்சையில் நவ.3ல் விடுமுறை பொன்னியின் செல்வன்..ராஜ ராஜசோழன் 1037 வது சதய விழா.. தஞ்சையில் நவ.3ல் விடுமுறை

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்

தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது. சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன் லங்கரிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் குருவான கருவூர் சித்தர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

சதய விழா

சதய விழா

விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நாளை நடைபெறுகிறது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். சதயவிழாவை ஒட்டி நாளை தஞ்சைக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

இந்நிலையில் பகலை விட இரவு நேரங்களில் இரவு நேரங்களில் தஞ்சை பெரிய கோயில் பொன் மாளிகை மின்னுவதைப் போல காட்சியளிக்கிறது. வண்ண வண்ண விளக்குகள், கண்ணைப் பறிக்கும் அலங்காரங்கள் என பழங்காலங்களில் தஞ்சை பெரிய கோவில் எப்படி இருந்திருக்குமோ தற்போது அப்படியே இருக்கிறது என நெகிழ்ந்து கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதுமட்டுமின்றி கோயில் வளாகத்தை சுற்றிலும் மிகச் சிறப்பாக அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழாவில் கலந்து கொள்ள வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் பேர் வருகை தந்துள்ளதாகவும் நாளை வழக்கத்தை விட கூட்டம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. காரணம் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற உள்ள சதய விழாவுக்கு வர ஆர்வம் காட்டுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

English summary
The Sataya ceremony started in 1037 year of Rajaraja Chola, the king of Tanjai who built Tanjai big temple and ruled Tanjai. The city of Tanjore is full of festivals. The people of the area say that due to Ponniyin selvan the crowd has increased more than usual.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X