தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல ஐடியா.. செம்பருத்தி, மவுனராகம்.. சீரியல்களில் இப்படிபட்ட காட்சிகளை இப்போது வைக்கலாமே!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: செம்பருத்தி, மவுனராகம் உள்பட மக்கள் அதிகம் பார்க்கும் சீரியல்களில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் காட்சிகளை வைத்தால் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக , தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜ்மோகன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி போடவேண்டியதன் அவசியத்தை வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வு செய்து வருகிறார்.

இதேபோல் திரைபிரபலங்கள் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் கொரோனா தடுப்பூசி குறித்தும், முககவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

இதேபோல் சீரியலில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான பலர் தாங்களாகவே முன்வந்து, சமுக வலைதளங்களில் வீடியோ போட்டு, முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

செவி வழி தகவல்கள்

செவி வழி தகவல்கள்

எனினும் சமூக ஊடகங்களிலோ, அல்லது இணைதளங்களையோ, அல்லது அரசின் செய்திகளை பார்க்காமல் அல்லது கண்டுகொள்ளாமல் பலரும் இருக்கிறார்கள். நகரப்புறங்களைவிட கிராமப்புறங்களில் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு போய் சேரவில்லை. தடுப்பூசி போட்டால் இறந்துவிடுவார்கள், காய்ச்சல் வரும், தடுப்பூசி போட்டதால் தான் அவருக்கு அப்படியாச்சு, இவருக்கு இப்படியாச்சு என்று செவி வழியாக கேட்கும் வதந்திகளை அப்படியே உண்மை என்று கிராமம் மற்றும் நகர்புறங்களில் நம்புகிறார்கள்

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

எனவே தொலைக்காட்சிகளில் வரும் பிரபல சீரியல்களில் கோவிட் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி காட்சிகள் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று டாக்டர் ஒருவர் ஐடியா கொடுத்துள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில். "செம்பருத்தி, மவுனராகம் இந்த மாதிரி சீரியலில் கோவிட் தடுப்பூசி போட்டுக்குற சீன் வச்சா பாதி பேர் போய் போட்டுக்குவாங்க" என்று கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அவர் கூறுவது போல் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சன் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும், ஜி தொலைக்காட்சியிலும், கலர்ஸ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள். எனவே இந்த சீரியல்களில் கோவிட் தடுப்பூசி குறித்து காட்சியாகவோ அல்லது சீரியல் ஆரம்பிக்கும் முன் தடுப்பூசி போடும் விழிப்புணர்வு காட்சிகளோ வைத்தால், நிச்சயம் பாமர மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதை அவர்கள் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

English summary
Dr. Rajmohan from Thanjavur has posted that there is a chance that more people will be vaccinated if there are scenes of covid vaccination in popular serials including Chembaruthi and Mounaragam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X