• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்க தமிழ்ச்செல்வனை உசுப்பேற்றும் உ.பி.க்கள்!அடுத்த தென் மண்டல அமைப்பு செயலாளர்- ஓவர் கூவல்!

Google Oneindia Tamil News

தேனி: தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் அடுத்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் என அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷம் எழுப்புவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் டிடிவி தினகரன் கலகக் குரல் எழுப்பிய போது அவருக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் தங்க தமிழ்ச் செல்வன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தினகரனின் அமமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுகவுக்கு வந்தார். திமுகவில் இணைந்த 2 மாதங்களிலேயே அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார் தங்க தமிழ்ச்செல்வன். இது அனைவரது புருவத்தையும் உயர வைத்தது.

இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த தேனி திமுக 2 ஆகப் பிரிக்கப்பட்டது. 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. தேனி தெற்கு, தேனி வடக்கு என திமுக மாவட்ட நிர்வாகம் பிரிக்கப்பட்டது. தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணனும் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டனர்.

ஒன்றியச் செயலாளரும் அவரே.. மாவட்டச் செயலாளரும் அவரே.. யார் சாய்ஸ் இது? கோவை மாவட்ட திமுக ருசிகரம்! ஒன்றியச் செயலாளரும் அவரே.. மாவட்டச் செயலாளரும் அவரே.. யார் சாய்ஸ் இது? கோவை மாவட்ட திமுக ருசிகரம்!

தங்கத்துக்கு எதிர்ப்பு

தங்கத்துக்கு எதிர்ப்பு

தங்க தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரையில் அவருக்கு இது ஏறுமுகம்தான்.. இன்னொரு பக்கம் அதிமுகவில் இருந்து வந்த செந்தில்பாலாஜி அமைச்சரானதைப் போல தங்க தமிழ்ச்செல்வனும் ராஜ்யசபா எம்.பி.யாவார் என்கிற பேச்சுகளும் ஒவ்வொரு முறையும் வருவது உண்டு. இதுஒருபுறம் இருக்க தங்க தமிழ்ச்செல்வன் நியமனத்துக்கு திமுகவில் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்புகள்தான். அமமுகவில் இருந்து தம்முடன் திமுகவுக்கு வந்தவர்களுக்குதான் பதவி கொடுக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் என்ற புகார்கள் வரிசை கட்டத் தொடங்கின.

 ஜாதிய சிக்கல்

ஜாதிய சிக்கல்

இத்தகைய கலகக் குரல் உச்சமாக, தங்க தமிழ்ச் செல்வனுக்கு எதிராக ஜாதிய ரீதியாகவும் திமுகவினர் திரண்டனர். இது அவருக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. உள்ளாட்சி தேர்தலிலும் தங்க தமிழ்ச் செல்வனுக்கு எதிராக புகார்கள் வரிசை கட்டின. சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில் திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனின் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவும் கூறப்பட்டது. இதனால் பல்வேறு வதந்திகளும் வலம் வந்தன. திமுகவின் உட்கட்சித் தேர்தல், மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையிலும் கூட தங்கத்துக்கு எதிராக திமுகவினரே போஸ்டர்கள் ஒட்டி அதிருப்தியை கொட்டி இருந்தனர்.

மா.செ.வாக தேர்வு

மா.செ.வாக தேர்வு

இந்த நிலையில்தான் தற்போது திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். எத்தனை எதிர்ப்புகள், எத்தனை உள்ளடி பஞ்சாயத்துகள் இருந்தாலும் தடை தகர்த்து மா.செ.வாக வென்றுவிட்டார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில்,என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்த கழக தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏 என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் தங்கம்.

தென் மண்டல அமைப்பு செயலாளர்?

தென் மண்டல அமைப்பு செயலாளர்?

தங்கத்தின் இந்த ட்விட்டர் பதிவில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர், தென் மண்டல அமைப்புச் செயலாளராக வாழ்த்துகள் என குசும்பாகவும் பதிவிட்டுள்ளனர். திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி என்பது மு.க.அழகிரி வகித்தது. அப்பதவிக்கு இப்போது யாரும் நியமிக்கப்படவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிதான் அந்த பதவியில் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை. இப்போது தங்க தமிழ்ச்செல்வனை வாழ்த்துவதற்கு அல்லது உசுப்பேற்றுவதற்கு அல்லது கோர்த்துவிடுவதற்கு உ.பி.க்கள் இப்படி ஒரு முழக்கத்தை முன்வைக்கின்றனர். ரொம்ப ஓவராத்தான் கூவுறாங்கப்பா?

English summary
Senior DMK leader Thanga Tamil Selvan got DMK Theni North Dist. Secreatry Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X