காதலுக்கு செக் வைத்த காதலனின் பெற்றோர்.. விபரீத முடிவை தேடிய சாருமதி.. தேனியில் மாதர் சங்கம் மறியல்!
தேனி : காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலனை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் வாலிப்பாறை அருகே தும்க்குண்டு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் ஜெயலட்சுமியின் மகள் சாருமதி (வயது 22). இவர் பெரியகுளம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் 4ஆம் ஆண்டு மாணவி ஆவார்,.
சாருமதி தும்மக்குண்டு ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் சமுத்திரக்கனியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சேர்த்து வைக்க மறுப்பு
இது தொடர்பாக சாருமதியின் அம்மா ஜெயலட்சுமி கூறுகையில நானும் எனது கணவரும் சமுத்திரக்கனியின் வீட்டிற்கு சென்று எனது மகளை உங்களது மகன் காதலித்து வருவதால் நாங்கள் திருமணம் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தோம். எனது கணவரும் சமுத்திரக்கனியின் வீட்டிற்கு சென்று எனது மகளுடன் உங்களது மகன் காதலித்து வருவதால் நாங்கள் திருமணம் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தோம்.

மனம் உடைந்து சோகம்
ஆனால் சமுத்திரக்கனியின் வீட்டார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை சமூத்திரக்கனியும் எனது பெற்றோர் சம்மதம் இல்லாமல் நான் ஏதும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார் இதனால் மனமுடைந்த எனது மகள் சாருமதி சரிவர சாப்பிடாமல் யாருடனும் பேசாலும் இருந்தார். கடந்த 21.6.2021. அன்று எனது மகள் தங்கி படிக்கும் கல்லூரி விடுதி அறையில். எனது மகள் ஃபேனில் துப்பட்டாவால் தனக்கு தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.

அலறிய மாணவிகள்
இரவு நேரம் என்பதால் தோழிகள் சாப்பிட செல்லும் நேரத்தில் எனது மகள் இந்த காரியம் செய்துள்ளார். சாப்பிட்டுவிட்டு தங்கும் விடுதிக்கு திரும்பிய தோழிகள் சாருமதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ந்து போய் சத்தம் போட்டுள்ளனர்.

கதவை உடைத்தனர்
இந்த சப்தம் கேட்ட விடுதி காப்பாளர் அறையின் கதவை உடைத்து சாருமதியின் தோழிகள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பெரியகுளம் மருத்துவர்கள் சாருமதியை பரிசோதனை செய்த பொழுது சாருமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கு பதிவு
இதனையடுத்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து வழக்கு பதியப்பட்டு எனது மகளை அடக்கம் செய்தோம். இன்று வரை எனது மகளை காதலித்து ஏமாற்றி எனது மகள் தற்கொலைக்கு காரணமான தும்மக்குண்டை சேர்ந்த சமுத்திரக்கணி மற்றும் அவரது குடும்பத்தார்களை கைது செய்யவில்லை என்றார்.

மாதர் சங்கம் மறியல்
இதனிடையே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாருமதியின் பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications