ஒரு ஓட்டில் வெற்றி.. ஊராட்சி மன்ற தலைவரான 21 வயது இளம்பெண் சாருலதா
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகியுள்ளார் 21 வயது இளம்பெண்.
தென்காசி: கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. திமுக,அதிமுக,பாமக, தேமுதிக, நாம்தமிழர் கட்சி, அமமுக, மநீம, உள்ளூர் செல்வாக்கு உள்ள சுயேட்சைகள் என பலமுனைப்போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 74 மையங்களில் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. வெற்றிக்கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
வாக்காளர்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. ஒரு ஓட்டும் 2 ஓட்டும் கூட வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.
இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சாருலதா. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் சாருலதா கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி பெற்றார். மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது. இதில் கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications