திமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல
நெல்லை: திமுகவினர் பேச்சைக் கேட்டு மயங்கி அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் இங்கிருந்து பிரிந்து சென்று திமுகவில் அமைச்சராகி இருக்கிறார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அதன்பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று கேட்டால் அது தெரியவில்லை என்றார்.
Recommended Video
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டும் என்றும் திமுக நீதிமன்றத்துக்குச் சென்றதால் தான் நிறுத்தி வைக்கப்பட்டது. நகர்ப்புற தேர்தலை நடத்தவும் திமுக நீதிமன்றத்தில் வாய்தா கேட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் நெல்லை மாவட்டமும் ஒன்று. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை ஹைக் கிரவுண்ட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள்
இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் தளவாய் சுந்தரம் கடம்பூர் ராஜு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

நீதிமன்றத்தில் வாய்தா
இந்த கூட்டத்தில் அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தான் இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது. திமுக நீதிமன்றத்திற்கு சென்றதால் தான் தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டது. நகர்ப்புற தேர்தலை நடத்த திமுக தற்போது நீதிமன்றத்தில் வாய்தா கேட்டு வருகிறது.

கல்வி துறை
தேர்தலுக்காக அஞ்சும் கட்சி அதிமுக இல்லை. தமிழகத்தில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான். நல்ல பல திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததன் காரணமாகத்தான் இப்போது தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கல்வித் துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழகம் உயர்ந்திருக்க காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தான் . ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து சாதனை படைத்தது அதிமுக ஆட்சியில்தான். கல்வித்துறையில் 2030 இல் அடைய வேண்டிய இலக்கை அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களால் தமிழ்நாடு இப்போதே அடைந்து உள்ளது.

ஸ்டாலின் செய்கிறார்
ஆனால் அதிமுக எந்த சாதனையையும் படைக்க வில்லை என தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்லி வருகிறார், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் தான் தமிழகம் இன்று வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கிறது . அதிமுகவை பார்த்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகளில் முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியினரே வரவேற்று வருகின்றனர். அறிவித்த தேர்தல் வாக்குறுதி எதையும் திமுக அரசு செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலையை பெயரளவிற்கு மட்டும் குறைத்துவிட்டு மத்திய அரசை திமுகவினர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர்
திமுகவினர் பேச்சைக் கேட்டு மயங்கி அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் இங்கிருந்து பிரிந்து சென்று திமுகவில் அமைச்சராகி இருக்கிறார்கள். தேசியமயமாக்கல் வங்கியில் பெற்ற நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என சொன்னார்கள் அதையும் செய்யவில்லை. முதியோரையும் ஏமாற்றி வாக்குகளைப் பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அமைச்சராக தற்போது இருக்கிறார். திமுகவினர் பொய் சொல்வதில் வல்லவர்கள் பொய் சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சியில் இப்போது அமர்ந்திருக்கிறார்கள்.

பிரச்சனை
உள்ளாட்சித் துறையால் மட்டும்தான் மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். ஒரு வாக்கு தான் வேட்பாளரின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயம் செய்கிறது . உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால்தான் கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும். எனவே ஒன்றுபட்டு அனைவரும் பாடுபட வேண்டும் . ஒரு வாக்கினை கூட விட்டுவிடாமல் கட்சி நிர்வாகிகள் களத்தில் கடுமையாக பணியாற்றி வெற்றியை தேடித் தரவேண்டும்" இவ்வாறு பேசினார்.

தெரியவில்லை
முன்னதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காட்டாற்று வெள்ளம். அதிலிருந்து வெளியேறி பல கட்சிகளில் நான் உட்பட பலர் இணைந்துள்ளோம்.அதிமுக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்சி. இதிலிருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று கேட்டால் அது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அதிமுக வாழ வேண்டும் வளர வேண்டும் அதற்கான முழு அக்கறை எனக்கு உள்ளது" இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications