• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொந்தளித்த பாஜகவினர்.. 75 வயதில் கைது! 2K கிட்ஸ் மத்தியிலும் நெல்லை கண்ணன் பிரபலமானது எப்படி?

Google Oneindia Tamil News

நெல்லை: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இடம்பெற செய்தது 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை.

Recommended Video

  நெல்லை கண்ணன் உயிரிழப்பு - ஆழ்ந்த சோகத்தில் தமிழ்நாடு

  தமிழ்க்கடல் என்று அழைக்கப்படும் பிரபல தமிழ் பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லைக் கண்ணன் வயது மூப்பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று மதியம் காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டு முன்பாக 1946 ஆம் ஆண்டு பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தவர். சிறப்பான பேச்சாற்றல் மூலமாக பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்களில் பார்வையாளர்களை கட்டிப்போட்டவர். சரளமான இவரது அழகிய நெல்லை தமிழ் பேச்சை கேட்கவே அன்று பலர் காத்துக்கிடப்பார்களாம்.

  ”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! ”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

  அரசியல்வாதி

  அரசியல்வாதி


  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த நெல்லை கண்ணன், சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த நெல்லை கண்ணன் ஓராண்டிலேயே அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

  2 ஆண்டுகளுக்கு முன்...

  2 ஆண்டுகளுக்கு முன்...

  இப்படி 90கள், 2000ங்களில் பரபரப்பான அரசியல்வாதியாகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த நெல்லை கண்ணன் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகளவில் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் அடுத்த தலைமுறைக்கு நெல்லை கண்ணன் என்ற ஆளுமை இருப்பதே தெரியாமல் போனது. இந்த நிலையில்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு நெல்லை கண்ணன் ஆற்றிய உரை அவரை மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

   சிஏஏ எதிர்ப்பு மாநாடு

  சிஏஏ எதிர்ப்பு மாநாடு

  கடந்த 2020 ஜனவரி மாதம் எஸ்டிபிஐ கட்சி நெல்லை மேலப்பாளையத்தில் நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார். இந்த வீடியோவை பார்த்த பாஜகவினர் நெல்லை கண்ணன் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசிவிட்டதாக குற்றம்சாட்டி போலீசில் புகாரளித்தனர்.

  கைது

  கைது

  அதன் தொடர்ச்சியாக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை, நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லை கண்ணனை பெரம்பலூரில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இன்று நெல்லை கண்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு இணையத்தில் நெட்டிசன்கள் 2 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கண்ணன் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  English summary
  How Nellai Kannan reached 2K Kids: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இடம்பெற செய்தது 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X