திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்தனை கண்களும் இந்திராணி மீதே.. ஆயிரத்தில் ஒருவள்.. அசத்தும் பெண்.. நாங்குநேரியில் தில் போட்டி!

இடைத்தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட உள்ளார்

Google Oneindia Tamil News

நெல்லை: நாங்குநேரியில் அத்தனை பேரின் கண்களும் இந்திராணி மீதுதான்.. காரணம், பலர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் இவர் ஒருவர்தான் பெண் வேட்பாளர்!

வரப்போகும் இடைத்தேர்தலுக்கு அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சியினர் மும்முரமாக இறங்கினாலும், சுயேச்சைகளும் பலர் ஆர்வம் காட்டி உள்ளனர்.

இதற்கான வேட்பு மனு தாக்கலும் நிறைவடைந்த நிலையில், நாங்குநேரியில் 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மது குடிப்போா் சங்க தலைவா் செல்லபாண்டியன் இந்த தேர்தலையும் விடவில்லை. இங்கேயும் அவர் வந்துவிட்டார்.. வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.

எனினும் இந்த தொகுதியில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டும் களம் இறங்க உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த தொகுதியில் மட்டும் இல்லை.. நடக்க போகும் இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரே இவர் ஒருவர்தான்!

Only One Woman candidate going to contest in Both by election

சுயேச்சையாக போட்டியிடும் இவர் பெயர் இந்துராணி. சுப்பிரமணியம் என்பவரின் மகள். திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி அருகேயுள்ள விஜயம் அச்சம்பாட்டை சேர்ந்தவர். எம்பிஏ படித்துள்ள இந்திராணிக்கு வயது 34 ஆகிறது!

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது.. களத்தில் 39 வேட்பாளர்கள் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது.. களத்தில் 39 வேட்பாளர்கள்

இடைத்தேர்தலில் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுவது பலரது கவனத்தை திருப்பி உள்ளது. தேர்தலை சந்திக்க பெண்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதா என தெரியவில்லை.

அது மட்டுமில்லை.. இந்த இடைத்தேர்தலி நிறைய செலவு செய்ய வேண்டி இருப்பது தெரிந்தும், நிறைய பேர் காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கிவிட்டனர். இதைதவிர இந்த தேர்தல் பதவி என்பது ஒரு வருட காலம்தான் என்பதாலும் பலரும் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. இந்நிலையில், இந்திராணி போட்டியை சந்திக்க தயாராகி உள்ளது வியப்பை தந்துள்ளது.

Only One Woman candidate going to contest in Both by election

நடக்க போகும் தேர்தல், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையிலானது என்றாலும், துணிந்து நின்று களத்தை சந்திக்க வரும் இந்திராணியை நாம் பாராட்டவே செய்யலாம்.

English summary
Only one woman candidate nominations in Nanguneri and Vikkiravandi By elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X