தமிழகத்திலும் 'மகாராஷ்டிரா' ஆபரேஷன்! திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் - இந்து முன்னணி காடேஸ்வரா பகீர்
நெல்லை: தமிழகத்திலும் மகாராஷ்டிரா போல எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுவது நடைபெற்று வருகிறது; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விரைவில் ராஜினாமா செய்வார் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனாவின் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கினர். இதனால் மகாராஷ்டிராவின் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
இதையடுத்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவியேற்றார். பாஜக தொடர்ந்து பின்பற்றும் இந்த கட்சி உடைப்பு, ஆட்சி கவிழ்ப்பு பார்முலா அடுத்து எந்த மாநிலத்தில் அரங்கேறும் என்பது விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

இந்து முன்னணி பிரசாரம்
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் அதன்பின்னர் செய்தியாளர்களிடமும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவரான காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
இந்துக்களின் உரிமை தமிழகத்தில் மீட்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாடு அரசு இந்துக்களின் உரிமையை வழங்கவில்லை.

தமிழகத்தில் மகாராஷ்டிரா ஆபரேஷன்
தமிழக அரசு அடுத்த 4 ஆண்டுகள் நீடிக்குமா? 3 ஆண்டுகள் தொடருமா? என்றெல்லாம் சொல்லவும் முடியாது. மகாராஷ்டிராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமது பதவியை ராஜினாமா செய்வார். தமிழகத்தில் ஆளும் திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் உளவுத்துறைதான் சொல்கிறது.

இந்துக்கள் உரிமை
தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பெண்கள் கூழ் காய்ச்சி வழங்குவர். அதனால் அம்மன் கோவில்களுக்கு விலையில்லா அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை கொன்டாடும் இந்துக்களுக்கு தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை- இந்துக்களின் உரிமையை வலியுறுத்திதான் நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இந்துக்களின் உரிமை மீட்புக்கான பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்












Click it and Unblock the Notifications