தன்னை வெட்டியவரை ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சென்று கல்லால் அடித்துக் கொன்ற பண்ணையார்.. தென்காசி பயங்கரம்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தன்னை வெட்டிய மாமாவை ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சென்று கல்லால் அடித்துக் கொன்றுள்ளார் பண்ணையார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவருக்கு மாடத்தி (முதல் மனைவி), நாச்சியர் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மாடத்தி ராமர் பாண்டி தம்பதியினருக்கு பண்ணையார் என்ற மகனும் சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவியான நாச்சியார் மற்றும் முதல் மனைவி மாடத்தி இடையே இடையே பலவருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

வாக்குவாதம்
சொத்து பிரச்சனை தொடர்பாகர ராமர் பாண்டியின் இரண்டு மனைவிகளுக்கும் வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் பாண்டியன் அவரது சொத்தை இரண்டாம் மனைவி நாச்சியார்க்கு கொடுக்க போவதாக தகவலை கேள்விப்பட்டிருக்கிறார். ராமர் பாண்டியின் முதல் மனைவியின் மகன் பண்ணையார். தனது அப்பாவிடம் சென்று சொத்தை ஏன் உன் இரண்டாவது மனைவிக்கு தருகிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த இரண்டாவது மனைவி நாச்சியாரின் தம்பி, அது அவர் விருப்பம் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.

கல்லால் தாக்கினார்
இதனால் நாச்சியாரின் தம்பிக்கும் பண்ணையாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நாச்சியாரின் சகோதரர், பண்ணையாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பண்ணையார், ரத்தம் சொட்ட சொட்ட ஓடிச்சென்று நாச்சியாரின் தம்பியை கல்லால் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நச்சியாரின் தம்பி சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார்.

சிகிச்சை
இதில் படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் பண்ணையார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீசார் விசாரணை
நாச்சியாரின் தம்பி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications