Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் இந்த நீராவி முருகன்: போலீஸ் தேடுதல் வேட்டை முதல் என்கவுண்டர் வரை பதற வைக்கும் திரில் கதை

80க்கும் மேற்பட்ட வழக்குகள். கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னணி தகவலைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழக காவல்துறையினரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். யார் இந்த நீராவி முருகன் என்பது பற்றியும் அவரது பின்னணி பற்றியும் பார்க்கலாம்.

Recommended Video

    யார் இந்த Neeravi Murugan? | போலீஸ் தேடுதல் வேட்டை முதல் என்கவுண்டர் வரை | Oneindia Tamil

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த நீராவி முருகன் சிறு வயதில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருமண வாழ்க்கையும் அவனுக்கு கசப்பானதாகவே மாறிவிட்டது. தாயும், தந்தையும் இறந்து விட்ட நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூத்துக்குடி வந்த நீராவி முருகனை விட்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் பின்னரே நீராவி முருகன் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

    தூத்துக்குடியில் கடந்த 2011ம் ஆண்டு தி.மு.க. பிரமுகர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன், சென்னையில் பதுங்கி இருந்தான். பின்னர் அந்த ஆண்டில் மே மாதம் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரண் அடைந்த அவன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவன் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வழிப்பறி, பூட்டை உடைத்து வீடுகளில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

    பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்செயல்

    பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்செயல்

    இந்த நேரத்தில் எதிர் கோஷ்டியினர் நீராவி முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதனால் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்த அவன் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் வந்து பதுங்கினான். இங்கு பல இடங்களில் கைவரிசை காட்டிய அவன், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் தனது நண்பன் அப்பாத்துரையுடன் சேர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டான். 2 பேரும் சேர்ந்து காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

    யானை தந்தம் கடத்தல்

    யானை தந்தம் கடத்தல்

    கடந்த 2015ஆம் ஆண்டு கோவில்பட்டியில் தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருப்பதாக நீராவி முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவன் சென்னையில் இருந்து தனது கூட்டாளி அப்பாத்துரையுடன் கோவில்பட்டிக்கு சென்றான். அங்கு தொழில் அதிபரை சந்தித்து பேசிய 2 பேரும் நீங்கள் யானைத்தந்தம் வைத்திருக்கும் விஷயத்தை போலீசில் சொல்லி காட்டி கொடுத்து விடுவோம் என்று கூறி பணம் கேட்டு மிரட்டினர். தொழில் அதிபர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரது 'மாருதி ஷிப்ட்' காரை சென்னைக்கு கடத்தி வந்து விட்டனர். இதையடுத்து நீராவி முருகனை பிடிக்க கோவில்பட்டி போலீசார் சென்னை வந்தனர்.

    போலீசில் சிக்காத நீராவி முருகன்

    போலீசில் சிக்காத நீராவி முருகன்

    அப்பாத்துரையை கைது செய்த போலீசார் அவனை வைத்து நீராவி முருகனை பிடிக்க திட்டமிட்டனர். கோயம்பேட்டில் வைத்து அவனை சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிய அவன் அதன்பின்னர் போலீசில் பிடிபடவே இல்லை. போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நீராவி முருகன், அடிக்கடி செல்போன் நம்பர்களையும், செல்போனையுமே மாற்றியுள்ளான்.

    செல்போனை மாற்றிய நீராவி முருகன்

    செல்போனை மாற்றிய நீராவி முருகன்

    70 செல்போன்களையும், ஏராளமான சிம்கார்டுகளையும் அவன் பயன்படுத்தி இருக்கிறான். 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய அவன், திண்டுக்கல் மாவட்டத்திலும் கைவரிசை காட்டியுள்ளான். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக தனது ஊரில் இருந்து வந்து சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களின் அறையில் போய் தங்குவதை நீராவி முருகன் வழக்கமாக வைத்துள்ளான். குகன், ஜோசப் என விதவிதமான பெயர்களையும் வைத்துக்கொண்டு நீராவி முருகன் ஏமாற்றி வந்திருக்கிறான்.

    சென்னையில் கைவரிசை

    சென்னையில் கைவரிசை

    இதன்பிறகு தனது புதிய கூட்டாளியாக தூத்துக்குடியை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவனை சேர்த்துக்கொண்டு நீராவி முருகன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தான். வடபழனி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளான்.
    சென்னையில் மட்டும் சுமார் 20 பெண்களிடம் நீராவி முருகன் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 55 பெண்களிடம் அவன் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

    செயின் பறிப்பு

    செயின் பறிப்பு

    கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்த நீராவி முருகன், கல்லூரி மாணவி ஒருவரின் செல்போன் கேமராவில் சிக்கினான். முருகன் ஏதாவது ஒரு பகுதியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி முடிந்ததும் நேராக ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதிக்கு சென்று விடுவான். அங்கு ஆந்திர மாநில அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயினை பறித்த பின்னர் நேராக ஆந்திராவுக்கு சென்று கள்ளக்காதலியின் வீட்டில் தான் நீராவி முருகன் தங்கியிருந்தான். பின்னர் அங்கிருந்து கேரளா சென்று விட்டு நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளான். அங்கு நண்பர்களின் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்தபோதுதான் போலீசில் சிக்கினான்.

    மீண்டும் மீண்டும் கொள்ளை

    மீண்டும் மீண்டும் கொள்ளை

    ஒவ்வொரு முறையும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்னர் மீண்டும் கொலை கொள்ளை வழக்கில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான். கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் பிடிபட்ட நீராவி முருகன், போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் தப்பிச்சென்றான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020ம்ஆண்டு நீராவி முருகனை ஈரோடு போலீசார் வள்ளியூர் அருகே கைது செய்தனர்.

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    ஜாமீனில் வெளிவந்த நீராவி முருகன் தலைமறைவானார். இவரை பல்வேறு மாதங்களாக தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    என்கவுண்டர்

    என்கவுண்டர்

    இதனையடுத்து, அவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீராவி முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் திட்டமிட்டு நடைபெறவில்லை. தற்காப்புக்காக நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+