திருக்குறள் சொன்னா பிரியாணி ஃப்ரீ.. பரபர அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்.. அதுக்கப்பறம் நடந்த ட்விஸ்ட்
திருவள்ளூர்: 10 திருக்குறள்களை கூறினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்ற வித்தியமாசமான அறிவிப்பை வெளியிட்ட ஓட்டல் மக்கள் வெள்ளத்தில் மிதந்துள்ளது.
இந்த அறிவிப்பை கேட்டதுமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்துவிட்டு, கடைக்கு வந்து ஒப்பித்துவிட்டு சிக்கன் பிரியாணியை வாங்கி ஜூட் விட்டனர்.
திருக்குறளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும், புலாலை தவிர்க்குமாறு கூறிய திருக்குறளை அதே புலாலை பிரபலப்படுத்த பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிரபலம் அடையும் திருக்குறள்
உலக பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள்தான், உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாவது நூல் என்ற பெருமையை கொண்டது. இருந்தபோதிலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருக்குறள ஒரு பள்ளிப்பாடம் என்ற அளவில்தான் பெரும்பாலானோரால் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியாலும், சமூக வலைதளங்களின் உதவியாலும் இன்று திருக்குறளின் பெருமை அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கவனம் ஈர்த்த அறிவிப்பு
இது ஒருபுறம் இருக்க, திருவள்ளூர் மாவட்டம் மணவாளம் நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. திருவள்ளுவர் தினமான நேற்று முன்தினம், அந்த ஓட்டல் சார்பில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களில், 10 திருக்குறள்களை மனப்பாடமாக கூறுபவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் வெள்ளம்
இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே, சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பர போஸ்டர்கள் பரவின. இதையடுத்து, அந்த ஓட்டலில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் நூற்றுக்கணக்கில் அங்கு சென்றனர். பின்னர் 10 திருக்குறள்கள் கூறியவர்களுக்கு பிரியாணி டோக்கன் வழங்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்தததால் பிரியாணி தீர்ந்து போனது. இதையடுத்து, இரவில் வந்து பிரியாணி வாங்குவதற்கு எஞ்சியுள்ளோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

"மகிழ்ச்சியாக உள்ளது"
இதுகுறித்து அந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, "இன்றைய இளைஞர்கள் செல்போன்களிலேயே மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு அறநெறியை எடுத்துக் கூறும் திருக்குறளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டோம். எனினும், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான இளைஞர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு அசத்தி பிரியாணியை வாங்கிச் சென்றார்கள். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

"சரியானது அல்ல"
இதனிடையே, திருக்குறள் கூறுபவர்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுக்கும் அறிவிப்பை தமிழ் ஆர்வலர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "திருக்குறளை இளம்தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நல்ல முயற்சிதான். அதைவிட முக்கியம், திருக்குறள் கூறிய வாழ்வியல் நெறியை கடைப்பிடிக்க வைப்பதுதான்.புலால் உணவை தவிர்க்கக் கூறிய திருக்குறளையே புலாலுக்கு விளம்பரமாக பயன்படுத்துவது சரியல்ல" என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications