பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக புகார் அளித்த தந்தை.. வழக்கு போட்ட போலீஸ்! தீ குளித்த மகன் மரணம்
தந்தை மீது வழக்குப் பதிவு செய்ததற்காக அவரது மகன் மனவருத்தத்தில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் திருத்தணியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: ரேசன் கடையில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருளில் இறந்த பல்லி இருந்ததாக புகார் கூறியவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாவின் மீது வழக்கு பதிவு செய்ததற்காக மன உளைச்சலுக்கு ஆளான மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீக்குளித்து உயிரிழந்த நபரின் பெயர் குப்புசாமி என்பதாகும். திருத்தணியைச் சேர்ந்த குப்புசாமி சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன். கடந்த வாரம் ரேசன் கடையில் கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை வீட்டிற்கு வாங்கி வந்தார் நந்தன்.
அந்த பையில் இருந்த புளியில் இறந்துபோன பல்லி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தன் ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். புளியில் இறந்த பல்லி இருந்ததை வீடியோவாகவும் பதிவு செய்தார். இதுகுறித்து ஊடகங்களுக்கு நந்தன் தகவல் தெரிவித்து இருந்தார். இது தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் செய்தியாக வெளிவந்தது.

போலீசில் புகார்
இதனை அறிந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் உடனடியாக நந்தன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தகவல் பரப்பியதாகவும் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் திருத்தணி ஆய்வாளர் ரமேஷ் பயனாளி நந்தன் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்தார்.

தீக்குளிப்பு
இந்த சம்பவத்தால் மனமுடைந்த பயனாளி நந்தன் தற்கொலை முயற்சி செய்யப்போவதாக அவரது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார். இதனையடுத்து நந்தனின் மூத்த மகன் குப்புசாமி திடீரென வீட்டுக்குச் சென்று அறைக் கதவை சாத்திக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை தட்டி உடைக்க முயன்றும் முடியவில்லை. வீட்டில் இருந்த பெட்ரோலை குப்புசாமி உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

அக்கம் பக்கத்தினர்
குப்புசாமியின் அவரது அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் வந்து தீயை அணைத்து காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் தீ மளமளவென குப்புசாமியின் உடலில் பரவியது.

சிகிச்சை பலனின்றி மரணம்
ஆம்புலன்ஸ் உதவியுடன் குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ காயங்கள் அதிகம் இருந்த காரணத்தால் குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பினால் ஏற்பட்ட சர்ச்சை ஒரு இளைஞரின் உயிரையே குடித்து விட்டதுதான் சோகம்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன், வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது, கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது!
இது தற்கொலை அல்ல,ஜனநாயக படுகொலை! இவ்வாறு கூறியுள்ளார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications