நரபலி..நள்ளிரவு பூஜை..பலாத்காரம்! மடத்தில் துடித்த மாணவி! திடுக்கிட்ட திருவள்ளூர்! சிக்கிய முனுசாமி!
திருவள்ளூர் : நள்ளிரவு பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி மர்ம மரணம் தொடர்பாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சாமியார் பலாத்காரம் செய்து மாணவியை தற்கொலைக்குத் தூண்டியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமன நிலையில், போலீசாரால் சாமியார் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி
அவருடைய தாய் மாமாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடைய பெற்றோர்களுடன் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வருவதாக இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவரு கைய பார்த்து சாமியார் உனக்கு நாகதோஷம் இருப்பதாக மாணவிக்கு தெரிவித்து அவர் பெற்றோருக்கும் கூறி உள்ளார். அதனால் வாரத்திற்கு ஒருமுறை ஆசிரமத்திற்கு வந்து சென்றால் அதற்கான பரிகார பூஜைகள் செய்து நாக தோஷத்தை நீக்கப்படும் என கூறியுள்ளார்.

கல்லூரி மாணவி மரணம்
இதை நம்பி அவருடைய பெற்றோர்கள் கல்லூரி மாணவியை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளாக கல்லூரி மாணவி ஆசிரமத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாகதோஷம் தீர்ப்பதாக நள்ளிரவு பூஜைக்கு சாமியார் முனுசாமி அந்தக் கல்லூரி மாணவியை அழைத்துள்ளார். அப்போது பிப்பிரவரி 14ஆம் தேதி மர்மமான முறையில் கல்லூரி மாணவி சாமியார் ஆசிரமத்தில் உள்ள வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை
இது தொடர்ந்து அவருடைய பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாமியார் மற்றும் மாணவியின் குடும்பத்துடன் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர். அத்தகைய விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதிச்சி தகவல்
மேலும் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி காவல் துறை தலைமை இயக்குனர் சிபிசிஐடி விசாரணைக்கு விசாரணை மேற்கொள்ளும் உத்தரவிட்டிருந்தார். சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு மாதங்களாக மாணவி பெற்றோர் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர்.

நள்ளிரவு பூஜை விவகாரம்
விசாரணை முடிவில் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக அவர் பெற்றோருடன் பொய் சொல்லி நள்ளிரவு பூஜைக்கு அடிக்கடி ஆசிரமத்திற்கு வர வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததால் சாமியார் முனுசாமியை குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சாமியார் இதேபோன்று பல பெண்களை நரபலி கொடுத்து சாகடித்து இருப்பதாகவும் யாரும் சொல்வதற்கு முன் வரவில்லை மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications