அண்ணா பிறந்தநாளில் அதிரடி.. “இருளர்” மக்களுக்கு விடியல் தந்த “புல்டோசர்”! இனி சுதந்திர பறவைகள்
திருவள்ளூர்: இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றிலும் கட்டப்பட்டு இருந்த தீண்டாமை தடுப்புச் சுவர் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்து இருக்கிறது கச்சூர் ஊராட்சி. இப்பகுதிக்கு உட்பட்ட வாழ்வந்தான் கோட்டை பகுதியில் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 29 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் இருளர் மக்களின் குடியிருப்புகளை சுற்றி பாஸ்கர் ராவ் என்ற நபர் நிலம் வாங்கி இருக்கிறார். அவர் தனது நிலத்தை விற்பனை செய்வதற்காக பாஸ்கர் அவென்யூ என்ற பெயரில் அதற்கு பதாகையும் வைத்து இருக்கிறார்.

தீண்டாமை சுவர்
மேலும் அப்பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய பழங்குடியின பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவ்வழியாக செல்ல முடியாத வகையில் குடியிருப்பை சுற்றிலும் சுமார் 7 அடி உயரத்தில் தீண்டாமை தடுப்பு சுவரையும் அவர் எழுப்பி வைத்திருந்தார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கு இருளர் பழங்குடியின மக்கள் ஆளாகி வந்தனர்.

நில உரிமையாளர்
இது தொடர்பாக பாஸ்கர் ராவை சந்தித்த இருளர் மக்கள் தீண்டாமை சுவற்றை அகற்றுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது அவர்களிடம், நீங்கள் இப்பகுதியில் வசிப்பதன் காரணமாகவே என்னுடைய நிலங்கள் விற்பனை ஆகவில்லை என்றும், இதன் காரணமாகவே இப்பகுதியில் சுவர் எழுப்பியதாக கூறியுள்ளார்.

போராட்டம்
இது தொடர்பாக இருளர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இருளர் மக்கள் கடந்த 12 ஆம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு இருந்தனர்.

புல்டோசர்
இதனால் இந்த விவகாரம் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து இருளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அருண்குமார், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் புல்டோசர் மூலம் தீண்டாமை தடுப்புச் சுவரை இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications