திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரளமாகப் புழங்கும் கஞ்சா..! பெண்களுக்கு ‘பல’ தொல்லை! திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் மீது பகீர் புகார்..!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை : திருவண்னாமலையில் புகழ்பெற்ற ரமணர் ஆசிரமத்தில் பெண் பக்தர்களுக்கு பல விதங்களில் இடர்பாடுகளை ஆசிரமத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்தி வருவதாகவும், கஞ்சா உபயோகம் ஆசிரமத்தில் அதிகரித்து வருவதாகவும் பெண் பக்தர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சரளமாகப் புழங்கும் கஞ்சா..! திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் மீது பகீர் புகார்..!

    திருவண்ணாமலை நகரில் செங்கம் சாலையில் ரமணர் ஆசிரமம் பல ஆண்டுகளாக ஆன்மீக பக்தர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஆசிரமமாக இருந்து வந்துள்ளது.

    சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்

    இந்த ஆசிரமத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து வந்து பாடல்கள் பாடியும், பகவான் ரமணரை வழிப்பாடு நடத்தி வருகின்றார்.

    திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம்

    திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம்

    இளையராஜா மட்டும் அல்லாது பல வெளிநாட்டினர் மற்றும் ரமணர் பக்தர்கள் பல உயர் அதிகாரிகள், நீதிபதிகள் என பல தரபட்ட உயர் பதவியில் உள்ளவர்களும் இங்கு அடிக்கடி வந்து ரமணரை வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இந்த ரமணாசிரமத்திற்கு கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பெங்களுர் பசவனகுடி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அஷோக் ஷங் மற்றும் அவரது மனைவி சுனிதா திமே கௌடா என்பவர்கள் சாமி தரிசனம் செய்தும் அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர்.

    பகீர் புகார்

    பகீர் புகார்

    மேலும் ஆசிரமம் சார்பில் அங்கு உள்ள நிர்வாகிகள் கோரிக்கையின் பேரில் பல வித உதவிகள் மற்றும் பல லட்சம் செலவில் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றார். அன்னதானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆசிரம நிர்வகம் செய்து வரும் சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் சுகுமார் ஆகியோர் சுனிதா திமே கௌடாவிடம் அன்னதானம் செய்யகூடாது என்று பல விதத்திலும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெண் பக்தர்

    பெண் பக்தர்

    ஆசிரமத்தில் உள்ள சுகுமார் என்பவர் தன்னிடம் அத்து மீறி அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும், தனக்கு மட்டும் அல்லாது ஆசிரமத்திற்கு வரும் பல பெண்களுக்கும் இந்த ஆசிரமத்தில் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து ஆசிரம நிர்வாகிகள் ஜெயந்தி பிரேம்குமார், பிரேம் குமார் உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் சுனிதா திமே கௌடா தெரிவித்தார்.

    கஞ்சா புழக்கம்

    கஞ்சா புழக்கம்

    மேலும் ஆசிரமத்தில் உள்ளவர்கள் பலர் கஞ்சாவை தொடர்ந்து உபயோகம் படுத்தி வருவதாகவும், இது குறித்தும் தான் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தனது புகாரின் அடிப்படையில் நாளை தன்னிடம் விசாரனை செய்ய உள்ளதாகவும் சுனிதா திமே கௌடா பேட்டியளித்தார். இந்த குற்றச்சாட்டுகளால் ரமணர் ஆசிரமத்தின் நடவடிக்கைகளில் பக்தர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A female devotee has lodged a complaint at the Thiruvannamalai police station alleging that the people at the famous Ramanar Ashram in Thiruvannamalai are causing trouble to female devotees in various ways and that cannabis use is on the rise in the ashram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X