திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியை எவராலும் திணிக்க முடியாது.. ஆனால்.. திருவண்ணாமலையில் அமைச்சர் ரோஜா!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.

Recommended Video

    உருக்கமாக பேசிய Roja! Minister Rojaவின் Kanchi Kamatchi தரிசனம் | OneIndia Tamil

    சித்ரா பவுர்ணமியையொட்டி ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோஜா திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று வருகை தந்தார்.

    அப்போது அவர் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகியோரை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆந்திரா எனது “தாய்வீடு”.. தமிழ்நாடு “மாமியார் வீடு”.. மாண்புமிகுவான நடிகை ரோஜா உருக்கம்! ஆந்திரா எனது “தாய்வீடு”.. தமிழ்நாடு “மாமியார் வீடு”.. மாண்புமிகுவான நடிகை ரோஜா உருக்கம்!

    அண்ணாமலையாரை பார்க்க முடியவில்லை

    அண்ணாமலையாரை பார்க்க முடியவில்லை

    இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அண்ணாமலையாரை பார்க்காமல் இருந்தது மிகவும் வருத்தம் அளித்தது. தற்போது அண்ணாமலையாரை தரிசனம் செய்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. கடந்த காலங்களில் கஷ்டங்களை அனுபவித்தேன்.

    கஷ்டங்கள்

    கஷ்டங்கள்

    ஆனால் கிரிவலம் வந்த பிறகு எனது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போனது. தெலுங்கு தேசம் கட்சியில் என்னை வளரவிடாமல் இரு முறை அக்கட்சியினரே தோற்கடித்தனர். மூன்றாவது முறை தான் இங்கே வந்து கிரிவலம் மேற்கொண்டேன். இதையடுத்து அப்போது நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்.

     அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    என்னை சகோதரியாக ஏற்று எனக்கு அமைச்சர் பதவி வழங்கினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தற்போது அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைத்த போது ஆந்திரா மக்கள் எப்படி சந்தோஷப்பட்டனரோ அது போல் தமிழக மக்களும் சந்தோஷம் பெற்றிருப்பர்.

    ஆட்சி அருமை

    ஆட்சி அருமை

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மிகவும் அருமையாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினை நான் எதிர்பார்த்தது வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் அவர் மிகவும கண்ணியமாக ஆட்சியை நடத்தி வருகிறார். மக்கள் கோரிக்கை வைத்தால் போதும் மின்னல் வேகத்தில் அதை அவர் செய்து முடிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்தி கட்டாயம் தேவை

    இந்தி கட்டாயம் தேவை

    ஆந்திர தமிழக எல்லையில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரு முதல்வர்களும் செய்து வருகிறார்கள். இந்தியை எவராலும் திணிக்க முடியாது. ஆனால் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தாய்மொழியுடன் இணைந்து ஆங்கிலமும் இந்தியும் கட்டாயம் தேவை. அனைத்து மொழிகளையும் பயின்றால்தான் நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைய முடியும்.

    இந்தி மட்டுமே தெரியும்

    இந்தி மட்டுமே தெரியும்

    மத்திய அமைச்சர்கள் பலருக்கு இந்தி மட்டுமே தெரிந்துள்ளது. நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை கேட்டு பெற இந்தி கட்டாயம் வேண்டும் என்றார். தென்னிந்தியாவில் இந்தி பேசும் மக்கள் குறைவாக இருப்பதால் அந்த மொழியை கற்குமாறு திணிக்க கூடாது என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. அதையேதான் அமைச்சர் ரோஜாவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Roja says that there should not be Hindi imposition. But Hindi is must to learn.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X