திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா... பறிபோன 2 உயிர்கள் - சரிந்து விழுந்த தூணால் அபசகுனமா?

தியாகராஜர் கமலாலய குளத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததால் அபசகுனமாக கருதப்படுகிறது.

Google Oneindia Tamil News

திருவாரூர்: தியாகராஜர் கமலாலய குளத்தில் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலே இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 அடி உயர அலங்காரத்தூண் சரிந்து விழுந்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல் அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்

இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட விழா கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனுடன் மற்றொரு சிறப்பம்சமாக தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கமலாலய குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது.

தெப்பத்தில் மூழ்கி உயிரிழப்பு

தெப்பத்தில் மூழ்கி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலூன் விற்க வந்த சிறுமி முஸ்கான் மற்றும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் குளத்தில் குளிக்க செல்லும் பொழுது நீரில் மூழ்கி உள்ளார்கள் தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அதில் தீயணைப்பு வீரர்கள் சிறுமி முஸ்கான் உடலை சடலமாக மீட்டனர். ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் உடலை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 சரிந்து விழுந்த தூண்

சரிந்து விழுந்த தூண்

நேற்று நடைபெற்ற தெப்பத் திருவிழாவிற்கு தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் சரிந்து விழுந்தது நல்லவேளையாக தெப்பத்தின் மீது விழவில்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவில் திருவிழாக்களில் உயிரிழப்பு

கோவில் திருவிழாக்களில் உயிரிழப்பு

கடந்த மூன்று மாத காலமாக கோவில் திருவிழாக்களில் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவி போது கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது.

களிமேடு தீ விபத்து

களிமேடு தீ விபத்து

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து வளைவில் திரும்பும் போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 12 பேர் உயிரிழந்தனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி மரணம்

தேர் சக்கரத்தில் சிக்கி மரணம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேரோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்றது. தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்ற தொழிலாளி தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கமலாலய தெப்பக்குளம்

கமலாலய தெப்பக்குளம்

திருவாரூர் என்றாலே தனித்துவமான அடையாளம் தியாகராஜர் ஆலயம். கோயிலுக்கு இணையான புகழ்பெற்றது கமலாலயம் என அறியப்பட்ட தெப்பக் குளம். தெப்பக்குளம் ஐந்து ஏக்கர் பரப்பு உள்ளது. அந்தத் தெப்பக்குளத்தில் வழுக்கி விழுந்து இறந்தவர்கள் பல பேர். தெப்பத்திருவிழா நடைபெறும் சமயத்தில் இரண்டு பேர் தெப்பக்குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 15 அடி தூண் ஒன்றும் சரிந்து விழுந்தது அபசகுனமாக கருதப்படுகிறது. எனினும் தெப்பத்திருவிழா குறிப்பிட்டது போல நடந்து முடிந்துள்ளது. திருவிழா நடந்த நேரத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Two persons drowned while the festival was being held at the Thiyagaraja Kamalalaya pool. A major accident was averted as the 15-foot-high decorative pillar collapsed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X