திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராஜ் வீட்டில் திணற திணற ரெய்டு.. ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை!

Google Oneindia Tamil News

திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 41.06 லட்சம் பணம், 963 சவரன் நகை சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. இந்தச் சோதனையில் 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐ போன் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.

இந்த ரெய்டில், கணக்கில் வராத ரூ. 15.5 லட்சம் பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கிப் பெட்டக சாவி, பென் டிரைவ் உள்ளிட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாயிண்ட் ஆபரேஷன்?.. காமராஜ் வீட்டிற்கு வருமான வரித்துறையும் வருகை.. விஜிலன்ஸோடு சேர்ந்து பரபர ரெய்டு ஜாயிண்ட் ஆபரேஷன்?.. காமராஜ் வீட்டிற்கு வருமான வரித்துறையும் வருகை.. விஜிலன்ஸோடு சேர்ந்து பரபர ரெய்டு

முன்னாள் அமைச்சர் காமராஜ்

முன்னாள் அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்படி முன்னாள் அமைச்சர் காமராஜ் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டறிந்தனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு

சொத்துக் குவிப்பு வழக்கு

முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திடீர் சோதனை

திடீர் சோதனை

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று அதிகாலை 5 மணியளவில் அதிரடி சோதனையை தொடங்கினர். மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் ரெய்டில் ஈடுபட்டனர்.

49 இடங்களில்

49 இடங்களில்

மன்னார்குடி அதிமுக நகரச் செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி.குமார், வேட்டைத் திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜ் சம்பந்தியின் வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

பணம், நகைகள் பறிமுதல்

பணம், நகைகள் பறிமுதல்

8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் 963 சவரன் நகை, 23.96 கிலோ வெள்ளி, ரூ.41.06 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
963 sovereign Jewels, 23.96 Kg Silver and Rs 41.06 Lakh were found in DVAC raid which was conducted for more than 8 hours at the places related to former AIADMK Minister Kamaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X