திருப்பூரை உலுக்கிய மூவர் கொலை! சைக்கிளில் தப்பிய ’சைக்கோ’ கொலையாளி! கடைசியில் நிலைமைய பாத்தீங்களா?
திருப்பூர் : திருப்பூர் அருகே தாயையும் இரு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வடமாநிலத்தை சேர்ந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தண்ணீர் இல்லாத பாழுங்கிணத்தில் விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் நெருப்பெருச்சல் அருகே கடந்த 23 ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் அடித்து கொலை செய்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளி தான், தற்போது தண்ணீர் இல்லாத கிணற்றில் சைக்கிளுடன் விழுந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் மற்றும் நித்தீஷ் ஆகியோருடன் குடியேறியுள்ளார்.

மூவர் கொலை
கடந்த 23 ஆம் தேதி வீட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது . உடனடியாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சைக்கோ கொலையாளி
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாபு தலைமையில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலையில் சம்பந்தப்பட்ட அப்பெண்ணுடன் தங்கியிருந்த நபர் தான் கொலை செய்திருப்பார் என முடிவுக்கு வந்து , அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது காங்கேயம் படியூர் அருகே தண்ணீர் இல்லாத 80 அடி கிணற்றில் சைக்கிளுடன் இறந்த நிலையில் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கிணற்றில் விழுந்து மரணம்
பின்னர் காங்கேயம் தீயணைப்பு துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி சடலத்தையும் அவர் ஓட்டிவந்த சைக்கிளையும் மேலே எடுத்தார். பிரேதத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு திருப்பூர் கமிஷனர் பாபு நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் தற்கொலை செய்துகொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

பெரும் பரபரப்பு
இவர் ஏற்கனேவே பெண்ணை கொலைசெய்துவிட்டு 2020 ஆண்டு கொலை வழக்கில் இருந்து விடுதலை ஆனவர் என்றும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.மேலும் கடந்த 9 நாட்களாக சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருப்பூர் மாநகர காவல்துறையினர்,நல்லூர் மற்றும் காங்கேயம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் சைக்கிள் சைக்கோ கொலைகாரன் தற்கொலை செய்துகொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications