காங்கிரஸை கடுமையாக விளாசிய வானதி சீனிவாசன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு கையோடு வைத்த அதிரடி கேள்வி
திருப்பூர்: தன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் என்றும் திருப்பூரில் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி சாதனைகளை விளக்கி தொடர் ஓவியம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வரையப்பட்டுள்ளது இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று பார்வையிட்டார்.

ஓவியங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறும் போது, "திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பிரதமர் மோடியின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் திட்டங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த ஓவியம் ஆனது வரையப்பட்டுள்ளது.
திருப்பூர் நிப்ட் கல்லூரி மாணவர்கள் 15 பேர் சேர்ந்து சுமார் 60 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர் இந்த ஓவியமானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இரட்டை வேடம்
வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் வருவதால் காங்கிரஸ் கட்சி தனது செத்துப்போன கட்சியை வாளர்த்து எடுக்க முயற்சி எடுத்து வருகிறது. வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது. தமிழக முதல்வர் 12 மாநில முதல்வர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட் தேர்வை தடை செய்ய முடியாது.

ஸ்டாலினுக்கு கேள்வி
நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மாணவர்களை ஏமாற்றாமல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும். தன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா என்பதை அவர் கேட்க வேண்டும்" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications