திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூரை அதிர வைத்த சம்சுதீன் கொலை.. பிரதான சாலையில் 100க்கணக்கான வாகனங்களில் நடந்த இறுதி ஊர்வலம்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் - ஏபிடி சாலையில், பழைய துணிகளை பிரிக்கும் வேஸ்ட் குடோனில் ஒன்றில் வாலிபர் ஒருவரின் உடல் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

கொலை குறித்து விசாரணை மேற்கொண்டபோது எம்ஜிஆர் காலனியை சேர்ந்த 23 வயதான சம்சுதீன் என்பதும் , காலை வீட்டிலிருந்து நண்பர்களுடன் வெளியே வந்த நிலையில் மதியம் உணவு அருந்த வீட்டிலிருந்து அழைத்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

யார் அவர்

யார் அவர்

இந்நிலையில் சந்தேகமடைந்த நண்பர்கள், வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சடலமாக இருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையில் சம்சுதீன் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

விசாரணை

விசாரணை

பணத்தகராறு தொடர்பாக நண்பர்களே சம்சுதீனை கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் சம்சுதீன் இறந்த தகவலை அறிந்ததும் அவரது நண்பர்கள் ஏராளமானோர் கூடி விட்டனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் உள்ளூரில் நிறைய பேருக்கு உதவியாக இருந்ததால் கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஊரடங்கு விதிமுறைக்கு மாறாக, திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று சம்சுதீன் உடலை அடக்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்றவர்களை தேடி வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறி அதிக கூட்டத்துடன் இறுதி ஊர்வலம் நடந்ததை போலீசார் தடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

English summary
The incident in which more than a hundred people marched in a two-wheeler on the main road and buried the body of the murdered a accused in Tirupur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X