ஓபிஎஸ் பொதுச் செயலாளராக தங்கமணி நாடகம் போட்டாரு! போட்டுடைத்த திண்டுக்கல் சீனிவாசன்! நெளிந்த ‘மாஜி’
திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவுடன் கூட்டணி வருவதற்கு பிற அரசியல் கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்பதாக பேசியது அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளராக்க தங்கமணி நாடகம் போட்டார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அந்தக் கட்சிக்குள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் கள ஆய்வுக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
அந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறிய சிறிய அரசியல் கட்சிகள் கூட 20 சீட்டு, 100 கோடி ரூபாய் எனக் கேட்கிறார்கள் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் மற்றொரு பேச்சு அதிமுகவுக்குள்ளேயே பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
அப்படி என்னதான் பேசினார் என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ''அந்த நேரத்தில் சசிகலா தான் அடுத்த முதல்வர் என்ற செய்தி பரப்பப்பட்டது. ஆனால் சசிகலா 4 வருடம் சிறைக்குச் செல்ல போகிறார் என்ற செய்தி வந்தது. அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வேண்டும் என கடவுள் உத்தரவு போட்டார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உத்தரவிட்டார்கள்.
ஆனால் வயது வித்தியாசப் படி பொன்னையன் தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அருளால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்பதற்காக தங்கமணி நாடகங்கள் நடத்தினார். அதற்கு பிறகு அவரே புரிந்து கொண்டு இப்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் சிறப்பாக பயணித்து வருகிறார். தினம் தினம் முதலமைச்சர் ஆவதற்கு பல திட்டங்களை ஓபிஎஸ் போட்டார். எல்லாமே வீணாகிப் போய்விட்டது.
திடீரென்று ஒரு நாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டும் என தங்கமணி போன்றவர்கள் என்னிடம் சொன்னார்கள். அப்போதுதான் கட்சியும் நன்றாக இருக்கும் என்றார்கள். அதற்கு அப்புறம் என்ன நடந்தது. எடப்பாடி தான் கட்சியின் தலைமையாக உருவெடுத்துள்ளார்" என்றார்.
திண்டுக்கல் சீனிவாசன் இப்படி அதிரடியாக பேசிக் கொண்டிருக்க கடந்த காலங்களில் நடந்ததை வைத்து நம்மை மாட்டி விடுகிறாரே என மேடையிலேயே நெளிந்தார் தங்கமணி. வழக்கமாக திண்டுக்கல் சீனிவாசன் மேடைகளில் ஏதாவது ஒன்றை பேசி பரபரப்பு கிளப்பி விடுவது வழக்கம். அது அந்த கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் மேடையில் தங்கமணியை வைத்துக் கொண்டே அவரை மாட்டி விடுவது போல திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications