நிதியில்லை பேனா சின்னம் அவசியமா? அந்த காசில் 6.5 கோடி பேருக்கு பேனா வாங்கி கொடுங்க! விளாசிய இபிஎஸ்!
திருச்சி : போதுமான நிதி இல்லாதபோது சென்னை மெரினாவில் ரூ.80 கோடிக்கு எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா? என கேள்வியெழுப்பியுள்ள தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு பதிலாக ரூ.80 கோடிக்கு 6.5 கோடி தமிழக மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் என கூறியுள்ளார்.
திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்திற்கு 11 மணியளவில் வருகை தந்த அவர் விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் உரை ஆற்றினார்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது பேசிய அவர்," அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. தமிழ்நாடு வளம் பெற உதவி செய்தவர்கள் எம்.ஜிஆர், ஜெயலலிதா. திமுக ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிறது. திருச்சிக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.ஏன் தமிழகத்திற்க்கு கூட கொண்டு வரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குத்தான் ஸ்டிக்கர் ஒட்டிகிறார்கள்.

அதிமுக திட்டங்கள்
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கால் திட்டங்கள் முடங்கியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை உடைந்த உடன் 325 கோடி நிதி ஒதுக்கி அணை கொண்டு வந்தோம்.அதை முடக்காமால் வேகமாக மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வாருங்கள். சத்திரம் பேருந்து நிலையம்,நேப்பியர் பாலம் போல் உள்ள கொள்ளிடம் பாலம் உட்பட அதிமுக கொண்டு வந்தது.

80 கோடிக்கு போனா
திமுக 15 மாத ஆட்சியில் ஆன்லைன் ரம்மி மட்டும் தான் கொண்டு வந்தீர்கள். அதன் மூலம் பணம் செல்ல வேண்டியவர்களுக்கு சரியாக செல்கிறது. திமுக அரசு போட்டோ சூட் மட்டுமே செய்கிறது. அதை தொலைக்காட்சியில் போடுகிறார்கள். நிதி இல்லாத போது ஏன் எழுதாத பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டும். 80 கோடிக்கு போனா அவசியமா? இதை வைத்து 6.5 கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம்.

நிதி இல்லை
பேனா வையுங்கள் 1 கோடியில் வையுங்கள் வேணாம் என்று சொல்லவில்லை. இந்த ஆட்சி வந்த பிறகு சொத்து வரி போனஸ், தண்ணீர் வரி,மின் வரி போனஸ் போன்ற போனஸ்கள் வழங்கியுள்ளனர். சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மின் உயர்வு 50% உயர்த்தியுள்ளனர்.இப்படி உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்கு பிடிப்பார்கள். திமுக அரசு நிதி இல்லை என்று சொல்கிறார் இதை தெரிந்து தானே உங்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது." என பேசினார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications