சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - 19ல் தேரோட்டம்
திருச்சி: புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 19ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்ற போதிலும் அதில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி நேற்றிரவு இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு வீதி உலா கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இரண்டாம் திருநாளான நாளை காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இதேபோல் தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு வாகனமாக அதாவது பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேச வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி வீதிஉலா கண்டருளுகிறார்.

இப்படி 9 நாட்கள் முடிந்து 10 ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications