திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஜித் வந்தால்தான் தீபாவளி.. கொண்டாட்டத்தை மறந்த நடுக்காட்டுப்பட்டி மக்கள்.. தொடர் பிரார்த்தனை!

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீபாவளியை கலையிழந்துள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீபாவளியை கலையிழந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 40 மணி நேரமாக அவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ஓஎன்ஜிசியின் அதி நவீன ரிக் இயந்திரங்கள் கொண்டு சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகே பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளைக்கிணறுக்கு அருகில் 2மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டப்படுகிறது.

17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்!17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்!

உள்ளே செல்வார்

உள்ளே செல்வார்

அந்த குழிக்குள் ஓஎன்ஜிசி ஊழியர் ஒருவர் உள்ளே சென்று சிறிய சுரங்கம் அமைத்து சிறுவனை காப்பாற்ற இருக்கிறார். இதற்காக குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மோசம்

மோசம்

இதையடுத்து தற்போது தமிழகம் முழுக்க பல பகுதிகளில் தீபாவளி கலையிழந்துள்ளது. சுஜித்தை மீட்கும் வரை தீபாவளி கொண்டாட்டங்கள் கிடையாது. அந்த சிறுவன் திரும்பும் போதுதான் எங்களுக்கு தீபாவளி என்று நிறைய பேர் கூறி வருகிறார்கள்.

அறிகுறியே இல்லை

அறிகுறியே இல்லை

அதேபோல் திருச்சியில் நடுக்காட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அப்பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் நடுக்காட்டுப்பட்டியில் இருக்கிறார்கள்.சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள்.

சத்தம் இல்லை

சத்தம் இல்லை

இதனால் அங்கு யாருமே தீபாவளி கொண்டாடவில்லை. நடுக்காட்டுப்பட்டியில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்காத நிலையில், பகுதிவாசிகள் அனைவரும் சுர்ஜித் வருகைக்காக காத்திருக்கின்றனர். ஒரு குடும்பம் கஷ்டப்படும் போது, நாங்கள் சந்தோசமாக இருக்க முடியாது என்று அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்

மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சந்தோசமாக கொண்டாட வேண்டும். மனிதத்தன்மை வளர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். தற்போது சுஜித் மூலம் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து உள்ளனர். அவனின் வருகையை கொண்டாட தீபாவளி நாளில் காத்து இருக்கிறார்கள்.

English summary
Save Sujith: No Deepavali celebration, Nadukattupalli people praying for the kid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X