திருச்சிக்கு வந்த கோதுமை நாகப்பாம்பு.. "இந்த வண்டியில் பாம்பு".. மக்களை காப்பாற்றிய துண்டு சீட்டு
திருச்சி: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பு என்ற பெயரை கேட்டாலே கிடுகிடுவென மக்கள் நடுங்குவது இயல்புதான்.. பாம்புகள் குறித்த பயம் என்பது வெறும் உடல் ரீதியான ஆபத்து மட்டுமல்லாமல் அது மக்களின் மனதோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்ச்சியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், திருச்சி கோர்ட்டில், பைக் ஒன்றில் பாம்பு புகுந்ததால் ஏற்பட்ட பரபரப்பு இன்னமும் அங்கு அடங்கவில்லை.. என்ன காரணம்?
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்தான் இந்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வக்கீல் ஒருவர், தன்னுடைய பைக்கில் கோர்ட்டுக்கு நேற்று வந்திருந்தார்.

திருச்சி ஸ்கூட்டரில் பாம்பு
அவர் தனது ஸ்கூட்டரை ஸ்கூட்டரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, தன்னுடைய பணிகளை கவனிக்க சென்றார். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பாம்பு திடீரென அவரது ஸ்கூட்டருக்குள் புகுந்துவிட்டது..
இதை பார்க்கிங் பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் தற்செயலாக கவனித்துவிட்டு, அதிர்ச்சியடைந்தார். பைக் யாருடையது என்பது தெரியாததால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.. யாரையாவது அழைத்து வரலாம் என்றால் யாராவது தெரியாமல் அந்த ஸ்கூட்டரைத் தொடவோ அல்லது நகர்த்தவோ முயன்றால் ஆபத்து நேரிடுமே? என்று நினைத்தார்..
பிளாஸ்டிக் கவருக்குள்
அதற்குள் பைக்கின் முன்பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கவர்களுக்குள் அந்த பாம்பு சென்று மறைந்து கொண்டது. உடனே அந்த நபர்,ஒரு துண்டு பேப்பரை எடுத்து, "இந்த ஸ்கூட்டருக்குள் பாம்பு இருக்கிறது, யாரும் இதனைத் தொட வேண்டாம்" என்று தெளிவாக எழுதி, அதனைத் தனது பைக்கின் முன்பகுதியில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டி வைத்தார்.
மேலும், வாகனத்தின் பதிவு எண்ணும், தேதி மற்றும் நேரமும் எழுதிவிட்டு, அந்த துண்டுச்சீட்டு பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு சிறிய கல்லையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை..
சிறிது நேரத்தில் வக்கீல் கணபதியின் உதவியாளர், பைக்கில் துண்டு சீட்டில் எழுதியிருப்பதை பார்த்து பதறிப்போய் கணபதியிடம் வந்து சொன்னார்..
துண்டு சீட்டில் எச்சரிக்கை
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணபதி பதறி அடித்துக்கொண்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். ஸ்கூட்டர் சீட் மீது இருந்த துண்டுச்சீட்டை பார்த்துவிட்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கோர்ட்டுக்கு விரைந்து வந்து, ஸ்கூட்டருக்குள் சோதனையிட்டனர். ஆனால் அங்கு பாம்பு இல்லை.
அவ்வளவு உறுதியாக யாரோ பேப்பரில் எழுதி வைத்து விட்டுபோனதால், வக்கீலின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி பார்த்தனர். அப்போது இண்டிகேட்டருக்கு பின்னால் சிறிய பாம்பு மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து பைக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். அந்த துண்டுச்சீட்டின் மூலம் வாகனத்துக்குள் புகுந்த பாம்பு ஒருவழியாக சிக்கியது...
கோதுமை மலைப்பாம்பு
முன்னதாக, நீதிமன்ற வளாகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், ஸ்கூட்டரில் ஒட்டப்பட்டிருந்த அந்த வினோத பேப்பரை பார்த்து வியப்படைந்தனர்... நீதிமன்ற வளாகம் முழுவதுமே இந்த செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டது..அந்த ஸ்கூட்டரைத் தூரத்திலிருந்தே வேடிக்கை பார்க்க பலரும் குவிந்துவிட்டனர்.
பைக்கின் ஓனர், தன்னுடைய வாகனத்தில் பாம்பு இருப்பதை மறைக்காமல், மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதி இப்படி ஒரு கடிதத்தை எழுதியது பலராலும் பாராட்டப்பட்டது. வழக்கறிஞர் ஒட்டிய அந்த எச்சரிக்கை நோட்டீஸ் சோஷியல் மீடியாவிலும் வேகமாகப் பரவியது. வாகனங்களை மரத்தடியிலோ அல்லது புதர்கள் நிறைந்த இடத்திலோ நிறுத்தும்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications