தமிழகத்தில் ஓமிக்ரான் இல்லை... எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம் - மா.சுப்ரமணியன்
திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமிக்ரான் வார்டில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமிக்ரான் வார்டில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி அரசு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல் மையத்தினையும், படுக்கைப் புண்கள் பராமிப்பு சிகிச்சை மையத்தினையும் திறந்து வைத்து, கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் புதிய RTPCR பரிசோதனைக் கருவியினையும் மருத்துவ சேவைக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலர் டாக்டர்.. ஜெ. இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்திரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம் .பழனியாண்டி, ப.அப்துல் சமது மற்றும் பலர் உள்ளனர்

ஆக்சிஜன் தட்டுப்பாடு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்றைய தினம் 142.5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு கலன் ரூ.2.5 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தட்டுப்பாட்டை போக்க எடுத்த நடவடிக்கைகளை அனைவரும் அறிவார்கள்.

எதையும் எதிர்கொள்வோம்
முந்தைய ஆட்சியில் தமிழகத்தில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு இருந்தது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 1,310 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்ள முடியும்.

கட்டாய புற்றுநோய் பரிசோதனை
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் 241 ஆக்சிஜன் ஆலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் 50 வயதைக் கடந்தவர்களுக்கு கட்டாய புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள்
இது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோன்று முதுகு தண்டுவட பிரச்சனையால் நீண்ட நாளாக படுத்து இருப்பவர்களுக்கு புதிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மட்டும் 10 பிரத்யேக படுக்கை வசதி இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 61 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 79 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் ஓமிக்ரான்
இன்றைய தினம் கூடுதலாக 20 ஆர்.டி.பி. சி. ஆர். எந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் ஒன்று இங்கு திருச்சி அரசு மருத்துவமனைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகில் 50 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 41 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை
தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும், அவர் தொடர்புடைய அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் எஸ்.ஜீன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்களின் மாதிரிகள் பெங்களூரு மருத்துவமனை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4 பேருக்கு ஓமிக்ரான் இல்லை
பெங்களூரு பரிசோதனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும். ஆனால் ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 29 மாதிரிகளில் 4 மாதிரிகள் சாதாரண டெல்டா வகை என திரும்ப வந்து விட்டது.
Recommended Video

கொரோனா தடுப்பு ஊசி
திருச்சி அரசு மருத்துவமனை ஓமிக்ரான் வார்டில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்படவில்லை. ஏழு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications