திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி என்ஐடியில் ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பிரதமரின் திட்டம் அறிமுகம்

Google Oneindia Tamil News

திருச்சி: என்ஐடி கல்லூரியில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவது என்ஐடிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என அதன் இயக்குநர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    திருச்சி NITக்கு மிகப்பெரிய அங்கீகாரம்: என்ன தெரியுமா?

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவில் தலைசிறந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை ஊக்குவிப்பதோடு அவர்களின் கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்தும் விதமாக கடந்த 2018-2019-ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டம் அறிவிக்கப்பட்டது.

    Trichy NIT gets approval for The Prime Ministers Research Fellows (PMRF) Scheme

    மேலும் இந்த திட்டம் ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்இ மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி என்ஐடி கல்லூரிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

    இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ரூ 70 ஆயிரமும் 3ஆம் ஆண்டுக்கு ரூ 75 ஆயிரமும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரூ 80 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.

    கொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்ககொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க

    இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்கள் கடுமையான தேர்ந்தெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஆண்டுதோறும் தேசிய ஒருங்கிணைப்பு குழு மூலம் இவர்களது பணிகள் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே உதவித் தொகைகள் வழங்கப்படும். இது என்ஐடிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Trichy NIT gets approval for The Prime Minister's Research Fellows (PMRF) Scheme. It has 20 students per year in this scheme.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X