யார் அப்படி சொன்னது? 1-9 ஆம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடக்கும் -அடித்து சொல்லும் அன்பில் மகேஷ்
திருச்சி: தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நிச்சயம் நடைபெறும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷின் திருச்சி திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் அருகே அண்ணாநகா், நெய்குணம், பாரிநகா், பாரதிதாசன் நகா், வீதிவடங்கம், பாப்பாக்குறிச்சி பகுதிகளில் 6000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்து கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் திருச்சி, திருவெறும்பூா், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

பேருந்து சேவை தொடக்கம்
இந்த நிலையில், புதிய பேருந்து வழித்தடம் தொடங்கி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சந்தை, அரியமங்கலம், காட்டூா் வழியாக பாப்பாக்குறிச்சிக்குச் செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அத்துடன் அவர் சிறிது தூரம் பேருந்தில் மக்களுடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.

படிக்கட்டில் மாணவர்கள் பயணிக்கக்கூடாது
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களுக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்கப்படும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களை பராமரித்து அதை இயக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் அதனை கண்காணிக்க வேண்டும். இளங்கன்று பயமறியாது என்பது போல மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும். படிக்கட்டு பயணத்தினை மாணவர்கள் பேஷனாக நினைக்கக்கூடாது.

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது நீட் தேர்வு ஜீலை 17 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1-9 வகுப்பு இறுதித் தேர்வு நிச்சயம் நடக்கும்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறும். அதுகுறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தோ்வுகள் நடைபெறாது என்ற வகையில் பரவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம்." என அவர் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications