உதயநிதி ஸ்டாலினுடன் நான் ஏன் களத்தில் நின்றேன் தெரியுமா? கலங்கடிக்கும் உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட இயக்குனர் மாரி செல்வராஜ், தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். நான் இங்கு இயக்குநர் இல்ல... இது என் ஊரு...என் மக்கள் என்று கூறினார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ஏன் களத்தில் நின்றேன் என்பது பற்றிய உண்மையை உடைத்துள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியதால் . திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகி உள்ளன. இம்மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்த பதிவில், "கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது... நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்... மீள்வோம்" என்று கூறியிருந்தார்.
நெல்லையில் வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருந்த புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இவர் யார் என்று கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகிறார்கள்.அதேநேரம் பிரபல நடிகர்கள் கூட யாருமே தூத்துக்குடிக்கு வரவில்லை. நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை.. இயக்குனர் மாரி செல்வராஜ் களத்தில் இறங்கி பணியாற்றுவதை பலரும் பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில், நான் இயங்கு இயக்குனர் எல்லாம் கிடையாது. இது என் ஊர், என் மக்கள்... நான் இயக்குனராக இல்லாவிட்டால் கூட இங்கு தான் நிவாரண பணிகளுக்காக அலைந்திருப்பேன்.. அதுவேறு இதுவேறு.. திரும்ப நான் சென்னைக்கு போனால் தான் இயக்குனர்.
எங்கள் ஊரில் இருந்து போய், வெளியூரில் உள்ளவர்கள் எங்கே என் அம்மாவை காணோம். என் அப்பாவை காணோம் என்று கேட்டு என்னிடம் அழும் போது, அதற்கு தான் நான் பதில் அளிக்க வேணடியது அவசியம் ஆகும். எல்லாருக்கும் என்னை தெரிந்திருப்பதும், என் ஊர் மக்கள் எல்லாரிடமும் என் நம்பர் இருப்பதும் என்னுடைய பலம் ஆகும்.
எல்லாரும் மாரி செல்வராஜ்கிட்ட சொல்லுவோம் என்று நினைக்கும் போது, அதற்கு நான் எதாவது செய்ய வேண்டும் அல்லவா? வெளியூர்களில் இருந்து ஒவ்வொருவரும், என் அண்ணா, என் அம்மா, அக்கா,அப்பாவுக்கு என்னாச்சு என்று கேட்டு அழும் போது, அந்த வலியும் வேதனையும் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். எப்படியாவது போய் உதவுமாறு கேட்டார்கள். அவர்களுக்காகத்தான் வந்துள்ளேன் என்றார்.
உதயநிதியுடன் வந்தது குறித்து கூறுகையில், நான் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்தேன். அது என் ஊர், என் மக்கள்.. மக்களின் கதறல் குறித்து நான் உதயநிதி ஸ்டாலினிடம் கூறினேன். முன்னதாக சேலத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி வந்திருந்தார். என் குரலில் இருந்த கதறலை கேட்ட உடன், உடனடியாக தூத்துக்குடி வந்தார்.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு, வந்தவரிடம் அவ்வளவு விஷயத்தையும் விளக்கி கூறினேன். நாம் நினைப்பது போல் இல்லை.. முழுக்க முழுக்க நீரால் சூழப்பட்ட பகுதி.. இங்கு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதை நான் விளக்கி கூறினேன்.. உதயநிதி வந்த பிறகு தான் நிறைய விஷயங்கள் என் மக்களுக்கு நடந்தது. மின்சாரம் வந்தது. நான் அழைத்து உதயநிதி ஸ்டாலின் உதவ ஓடி வந்தாரே தவிர அவருடன் நான் சேர்ந்து வரவில்லை. இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications