சூரனை சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர்..திருச்செந்தூர் கோவில் அருகில் கூடிய கூட்டம் தலையா கடல் அலையா?
தூத்துக்குடி:
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையில் அலைகடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். ஆறுநாள் விரதம் இருந்த பக்தர்கள் பரவசத்துடன் சூரசம்ஹாரத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம். முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். சிவ மைந்தனுக்கு முன்னாள் ஆணவம் நிற்குமா? அழிந்து போனது.
முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
சூரபத்மன்
ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான்.
சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டு வந்தார். முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்தை விண்ணதிர எழுப்பினர்.

யானை முகன் தாரகாசூர வதம்
சூரபத்மனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன் முதலில் தனது பரிவாரங்களுடன் தலையை ஆட்டியபடி முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை பார்த்த முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்து அவனது தலையை கொய்தார்.

சிங்கமுகாசூரன் வதம்
சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் தலையை ஆட்டியபடி வந்தான். முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் தனது வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து சூரபதுமன் போரிட வந்தான். ஆனால் அவன் நேரடியாக போரிடவில்லை.

சூரசம்ஹாரம்
சூரன் மாய வடிவெடுத்து முருகனுக்கு போக்கு காட்டினான். கடலானான், மரமானான். முருகனின் வேலிடம் இருந்து அவன் தப்ப முடியுமா? மாமரமாக வடிவமெடுத்து வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார். இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். கோவிலினின் அருகில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா என்று கேட்கும் அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடியிருந்தனர்.

அசுரனுக்கு அருளிய சுப்ரமணியர்
சக்தி வேல் கொண்டு சம்ஹாரம் செய்த சூரனை தன்னுடன் சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார் முருகப்பெருமான். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக மாறினான். தன்னை எதிர்த்து போரிட்ட அசுரர்களை ஆட்கொண்ட தலம் இந்த திருச்செந்தூர்.

கடல் அலையென திரண்ட பக்தர்கள்
சூரசம்ஹாரம் நிகழ்வினைக் காண கடற்கரையில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என்ற வியப்பை ஏற்படுத்தியது. ஏழாம் நாள் திருவிழாவான நாளை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் மட்டுமல்லாது திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, சோலைமலை, சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications