Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா - பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வர தடை

திருச்செந்தூரில் வருகின்ற 12ஆம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி மீறி சர்ப்ப காவடி கொண்டு வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tiruchendur Vaikasi Visakham Festival Devotees are not allowed to Sharpakavadi

Recommended Video

    திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா - பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வர தடை

    வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

    வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். ரிஷபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். விசாகம், ஞான நட்சத்திரம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    வரும் 12ஆம் தேதி வைகாசி விசாகத்தன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 2.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடைபெறுகிறது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய அனைத்து விதமான முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவிழாக் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    குறிப்பாக வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருக்கோயிலுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் ஏற்பாடு செய்ய நகராட்சியினரை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

    திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், ஆத்தூர் நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் ஆகிய இடங்களில் 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் தங்கு தடையின்றி மின் விநியோகம் செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தப்பட்டது.

    மூன்று நாட்கள் தரைவழித் தொலைபேசி மற்றும் அலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகள் செய்யவும், திருக்கோயிலின் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினர் இத்திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் துரித நடவடிக்கை எடுக்கவும், அரசு வாகனங்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் ஆகியவைகள் வடக்கு டோல் கேட்டிலும், பிற வாகனங்கள் தெற்கு டோல் கேட் வாயிலாக வந்து போகவும், பழுதடைந்துள்ள சாலைகள் சரி செய்தல், தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்கிட ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையாக பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்வதற்கு 120 சிறப்பு பேருந்துகள் உட்பட 220 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், "திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடலில் குளிப்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சர்ப்பக் காவடி எடுத்து வர அனுமதி கிடையாது. அனுமதி மீறி கொண்டு வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+