"வேண்டுகோள்" மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் நிதி ஒதுக்கீடு என்பது சரியல்ல.. எடப்பாடி பழனிசாமி!
வேலூர்: மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.. புதிய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி அளிக்கப்படும் என்று சொல்வது சரியல்ல என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களை பார்க்காமல், தமிழக மக்களை மத்திய அரசு பார்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடாததால், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழிக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்குவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக பாஜகவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக எதிர்க்கும். தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையை யாராலும் அசைக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வேலூர் கோட்டை மைதானத்தில் அதிமுக தரப்பில் இலக்கு 2026 என்ற தலைப்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் லட்சிய பாசறை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
அதேபோல் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கிறார்கள். மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழ்நாட்டு மக்களை பாருங்கள். இங்கு ஆட்சி செய்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். இன்று கல்வியில் சிறந்த மாநில தமிழ்நாடு. அப்படியான தமிழ்நாடு மக்கள் கல்வியில் வளர்ச்சி பெற புதிய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி அளிக்கப்படும் என்று சொல்வது சரியல்ல.
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா எதனை கடைபிடித்தார்களோ, அதனை அதிமுக கடைபிடிக்கும். அதனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை கடைபிடிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications