வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. 3 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய காட்சி- வீடியோ

Google Oneindia Tamil News

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்ததால் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர் மட்டம் கடந்த வாரம் 48 அடியை எட்டியது. இதன் முழு கொள்ளளவு 62 அடியாகும்.

இந்த நிலையில் இந்த அணைக்கு நேற்று இரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் 58 அடியானது. எனவே அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு - ஏரியின் நீர்மட்டம் 22 அடிசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு - ஏரியின் நீர்மட்டம் 22 அடி

செண்பகத்தோப்பு அணை

செண்பகத்தோப்பு அணை

அதன்படி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு செண்பகத்தோப்பு அணையின் 7 ஷட்டர்கள் திறக்கப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் ராமநாதபுரம், மல்லிகாபுரம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழந்தது.

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வழியின்றி தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளப்பெருக்கால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆரணி ஆறு

ஆரணி ஆறு

திருவண்ணாமலை மாவட்டம் பாயும் துணை நதி கண்டல நாகநதியாகும். இது ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக செல்கிறது. ஆரணி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது ஆரணி வழியே பாயும் ஆற்றிலும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

மக்கள் ஆர்வம்

இதை பார்க்க ஆரணி பாலத்தின் மீது மக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கண்ணமங்கலம் அருகேயும் பாயும் இந்த ஆறு கடைசியாக 2017-இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்தோடு இப்போது ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

English summary
Kamandala Naga Nathi River in Arani gets flooded after 3 years. People visited the river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X