மறந்தும் நீங்களாக ஆஸ்பிரின், பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம்.. திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என கலெக்டர் சிவசவுந்தரவல்லி அறிவுறுத்தி உள்ளார். வெயில் தாக்கத்தின் போது ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கலெக்டர் சிவசவுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம். மோர் அதிகமாக குடிக்கலாம். உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசலை குடிக்க வேண்டும். வியர்வை வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கூட குளிக்கலாம்.
ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ். பொடியை 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் கலந்து, அதை 24 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். உடல் சோர்வு, மயக்கம் அதிகமாக இருந்தால் டாக்டரை அணுக வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக்கூடாது. டாக்டரின் ஆலோசனைபடி நடந்துகொள்ள வேண்டும்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம். சிறுவர்கள் மதிய நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது, புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். கோடை வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்பு: வெயில் தாக்கத்தின் போது ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications